Today Rasi Palan: அக்டோபர் 10, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவான பலன்கள்:
மீன ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும்.
முன்பு இருந்த குழப்பங்கள் நீங்கி, மனதில் தெளிவும் அமைதியும் பிறக்கும்.
திட்டமிட்ட வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்களின் ஆதரவு கிடைக்கும்.
சமூக கலந்துரையாடல்களின் போது நிதானம் தேவை.
குடும்பத்தினருடன் பேசும் பொழுது கவனத்துடன் பேசுங்கள்.
நிதி நிலைமை:
நிதி நிலைமை இன்று சீராக இருக்கும்.
எதிர்பாராத பண வரவுகளுக்கான வாய்ப்பு உள்ளது.
சேமிப்பு மற்றும் நிதி பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
வரவுக்கு ஏற்ற செலவுகளை செய்வது நல்லது.
புதிய வீடு, வாகனம் அல்லது சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் இன்றைய நாள் சாதகமாக இருக்கும்
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலைக்கும்.
கலகலப்பான சூழல் நிலவும். உங்கள் பேச்சு மற்றவர்களை கவரும் விதத்தில் இருக்கும்.
இதன் காரணமாக உறவுகள் பலப்படும்.
திருமண உறவில் இருந்த மன வருத்தங்கள் நீங்கி, நல்லிணக்கம் ஏற்படும்.
துணையுடன் இணக்கமான சூழல் ஏற்படும். தனிப்பட்ட உறவுகளில் நம்பிக்கை அதிகரிக்கும்.
பரிகாரங்கள்:
நிதி மற்றும் செல்வ செழிப்புக்கு மகாலட்சுமி தாயாரை வழிபடலாம்.
ஞானம், தெளிவு மற்றும் சுப பலன்களுக்கு குரு பகவானை வழிபடுங்கள்.
ஏழைகளுக்கு உணவு அல்லது உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது.
தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்த்து சிறிது நேரம் மௌன விரதம் அல்லது தியானம் செய்வது மன அமைதிக்கு உதவும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.