- Home
- Politics
- தமிழ்நாட்டு பெண்களுக்கும் வலை..! பாகிஸ்தானின் JeM உருவாக்கும் ரகசிய படை..! இந்தியாவுக்கு ஆபத்து..!
தமிழ்நாட்டு பெண்களுக்கும் வலை..! பாகிஸ்தானின் JeM உருவாக்கும் ரகசிய படை..! இந்தியாவுக்கு ஆபத்து..!
உளவுத்துறை ஆதாரங்கள் இதை "உளவியல் போர் மற்றும் அடிப்படை ஆட்சேர்ப்புக்கு" பயன்படுத்தப்படும் என்று எச்சரிக்கின்றன. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என இந்திய உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்ட தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது அதன் முதல் பெண்கள் படை பிரிவை உருவாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அமைப்பின் வரலாற்றில் பெண்கள் ரகசியப் படையை உருவாக்குவது மாபெரும் மாற்றமாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகள் பாரம்பரியமாக பெண்களை போர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்த்து வந்தன.
இந்தப் புதிய படை ‘ஜமாத் அல்-முஃமினாத்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கு ‘நம்பிக்கைப் பெண்கள் சமூகம்’ என்று பொருள். ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மவுலானா மசூத் அஸார் பெயரில் வெளியிடப்பட்ட ஒரு கடிதத்தில் இந்த அறிவிப்பு வெளியியாகி உள்ளது. நேற்று பாகிஸ்தானின் பஹவல்பூர் உள்ள மார்கழ் உஸ்மான்-ஓ-அலி மையத்தில் இந்தப் பெண்கள் பிரிவுக்கான ஆட்சேர்ப்பு தொடங்கியது.
மே மாதத்தில் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையகமான மார்கழ் சுபானல்லா அழிக்கப்பட்டதும், அமைப்புக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதும் இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இதன் பிறகு ஜெய்ஷ்-இ-முகமது புதிய உத்தியை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை சேர்ப்பது, உளவு பார்ப்பது, நிதி திரட்டுவது, உளவியல் போருக்கு பயன்படுத்துவது. இது ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹரம், ஹமாஸ் போன்ற அமைப்புகளின் உத்தியைப் போன்றது.
மசூத் அஸார் அவரது சகோதரர் தல்ஹா அல்-சைஃப் ஆகியோர் இந்த முடிவை ஒப்புக்கொண்டனர். இது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் 2024-க்குப் பிறகான பெண்கள் ஆட்சேர்ப்பு உத்தியின் தொடக்கமாக கூறப்படுகிறது. இந்தப் படைக்கு மசூத் அஸாத்தின் சகோதரி சதியா அஸ்ஹர் தலைமை தாங்குகிறார். அவரது கணவர் யூசுஃப் அஸ்ஹர் ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்டவர்.
ஜம்மு-காஷ்மீர், உத்தரப் பிரதேசம், இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழகம் போன்ற இடங்களில் பெண்களை இலக்காகக் கொண்டு, சமூக ஊடகங்கள், மதரஸாக்கள் மூலம் ஆட்சேர்ப்புக்கு முயற்சி நடைபெற உள்ளது. தென் மாநிலங்களில் உள்ள பெண்களை ரகசியமாக ஆன்லைன் நெட்வொர்க்குகள் மூலம் குறிவைக்கும் என்று தெரிய வந்துள்ளது. இறை பணி என அறிமுகமாகி நுட்பமான பிரச்சாரம் மூலம் படித்த, நகர்ப்புற முஸ்லிம் பெண்களை ஈர்க்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆரம்ப ஆன்மீக போதனை வேண்டுமென்றே செய்யப்பட்ட முதல் கட்டமாகும். இது அமைப்பின் அடிப்படை அரசியல், ஜிஹாதிஸ்ட் சித்தாந்தத்திற்கு ஆட்சேர்ப்பு செய்பவர்களை படிப்படியாக மூளைச்சலவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த படையில் ரகசியமாக சேர்க்கப்படும் பெண்கள், தகவல் கொடுப்பது, நிதி திரட்டுவது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். எதிர்காலத்தில் பெண் தற்கொலை, குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கும் பயிற்சி அளிக்கப்படலாம் என்று உளவுத்துறை ஆதாரங்கள் கூறுகின்றன.
செல் அடிப்படையிலான கட்டமைப்பு சிறிய குழுக்கள் மூலம் செயல்படும். பாகிஸ்தானின் பஞ்சாப், காஷ்மீர் பகுதிகளில் சமூக ஊடகங்கள் மூலம் செல்வாக்கு பரப்புதலுக்காக ஈடுபடுத்தப்படுவர். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை ஐ.நா. மற்றும் பல நாடுகள் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. இது புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளது. இந்தப் புதிய பெண்கள் படை ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் இந்தியாவில் உள்ள தீவிரவாத நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான முயற்சியாகக் கருதப்படுகிறது. உளவுத்துறை ஆதாரங்கள் இதை "உளவியல் போர் மற்றும் அடிப்படை ஆட்சேர்ப்புக்கு" பயன்படுத்தப்படும் என்று எச்சரிக்கின்றன. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என இந்திய உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.