- Home
- Politics
- காங்கிரஸ் கூட்டத்திலும்தான் தவெக கொடி பறக்கிறது..! EPS-ன் பகல் கனவு பலிக்காது..! செல்வப்பெருந்தகை முட்டுக்கட்டை..!
காங்கிரஸ் கூட்டத்திலும்தான் தவெக கொடி பறக்கிறது..! EPS-ன் பகல் கனவு பலிக்காது..! செல்வப்பெருந்தகை முட்டுக்கட்டை..!
தவெக-அதிமுக கூட்டணி அமைய வாய்ப்பு 10-20% மட்டுமே, ஏனென்றால் விஜய் தனது தனிப்பட்ட இமேஜை உயர்த்த முயற்சிக்கிறார். அதிமுக-பாஜக கூட்டணி தொடரலாம், ஆனால் அதில் தவெக இணைய வாய்ப்பில்லை என்கிறார்கள் அரசியல் விமர்ச்கர்கள்.

அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி தவெக கொடி அசைவதைப் பார்த்து கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டது எனப் பேசி இருந்தது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜயுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தவெகவுடன் கூட்டணி என பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ‘‘காங்கிரஸ் கூட்டத்திலும் தவெக கொடி பறந்தது நேற்று. அதற்காக எங்களுடந்தான் கூட்டணி என நாங்கள் சொல்லிவிட முடியுமா? இபிஎஸ்பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார். அவரது பகல் கனவு பலிக்காது. ஏற்கெனவே அதிமுக என்பது அமித் ஷா திமுகவாக மாறிவிட்டது. அதனால் அவர் அங்கே தான் எதிர்பார்க்க முடியும் . மக்களிடமும் எதிர்பார்க்க முடியாது. வேறு கூட்டணியிடமும் எதிர்பார்க்க முடியாது’’ எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைகிறதா என்றால், தற்போதைய அரசியல் நிலவரப்படி இல்லை என்றே தெரிகிறது. தவெக நிர்வாகிகள் அதிமுகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று தெளிவாக மறுத்துள்ளனர். நேற்று நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி பேசிய கூட்டத்தில் தவெக கொடிகள் தென்பட்டதை வைத்து, பெரிய கட்சி கூட்டணிக்கு வருகிறது.பிள்ளையார் சுழி போட்டாகி விட்டது என்றார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தவெகவோ அது நாங்கள் அனுப்பவில்லை, அவர்களின் தவறான புரிதல்" என்று மறுத்தது.
எடப்பாடி பழனிச்சாமி , தவெக கொடிகளை கண்டு "கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டது என்று சொன்னாலும், இது அதிமுகவின் தனிப்பட்ட கருத்தாகவே சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை எதிர்க்க, அதிமுக தனது கூட்டணியை வலுப்படுத்த முயல்கிறது. ஏப்ரல் 2025-ல் அதிமுக-பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டது, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. ஆனாலும், பாஜக-அதிமுக இடையே தொகுதிப் பங்கீடு, உள்ளார்ந்த பிரச்சினைகளே இன்னும் தீர்க்கப்படவில்லை.
விஜய், திமுகவை முதன்மை எதிரியாகக் கருதினாலும், அதிமுக-பாஜக கூட்டணியை தவிர்க்கிறார். அவர் "என்னை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி" என்று கூறியுள்ளார். ஆகவே, தவெக-அதிமுக கூட்டணி அமைய வாய்ப்பு 10-20% மட்டுமே, ஏனென்றால் விஜய் தனது தனிப்பட்ட இமேஜை உயர்த்த முயற்சிக்கிறார். அதிமுக-பாஜக கூட்டணி தொடரலாம், ஆனால் அதில் தவெக இணைய வாய்ப்பில்லை என்கிறார்கள் அரசியல் விமர்ச்கர்கள்.