Kiwi Fruit : ஆண்களே! தவறாம கிவி பழம் சாப்பிடுங்க.. அந்த பிரச்சனையே வராது
ஆண்களின் ஆரோக்கியத்திற்கு கிவி பழம் எவ்வளவு நம்மை பாய்க்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Kiwi Fruit Benefits
இன்றைய இளைஞர்களில் பலர் மலட்டுத்தன்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரோக்கியமற்ற உணவு, மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை போன்றவை விந்தணுக்களின் தரம் குறைவதற்குக் காரணம். இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு கிவி பழம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
கிவி பழம்
பச்சை நிறத்தில் இருக்கும் இந்த கிவி, வைட்டமின் சி-யின் சிறந்த மூலம். ஒரு கிவி பழத்தில் மற்ற பழங்களை விட மூன்று மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், ஆண்களின் கருவுறுதல் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும்
கிவியில் உள்ள ஜிங்க், ஃபோலேட் போன்றவை டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும். இது ஆண்களின் ஆற்றலையும், கருவுறுதல் திறனையும் மேம்படுத்தும். விந்தணு உற்பத்தி மற்றும் இயக்கத்தை அதிகரித்து கருத்தரிப்பு வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
வைட்டமின் சி
NCBI ஆய்வின்படி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துகின்றன. கிவியில் உள்ள வைட்டமின் சி மன அழுத்தத்தைக் குறைத்து, கருவுறுதல் திறனை மேம்படுத்தும்.
ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடணும்?
தினமும் ஒன்று அல்லது இரண்டு கிவி பழங்களைச் சாப்பிடுவதன் மூலம், ஆண்களின் கருவுறுதல் தொடர்பான ஹார்மோன்கள் சமநிலை பெறும். இது விந்தணுக்களின் தரம், டெஸ்டோஸ்டிரோன் அளவு மற்றும் மன அமைதியை மேம்படுத்தும் ஒரு இயற்கை தீர்வாகும்.