- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Hair Growth Remedies : கூந்தல் நீளமா வளரனுமா? இந்த 1 பொருளே போதும்! ட்ரை பண்ணி பாருங்க
Hair Growth Remedies : கூந்தல் நீளமா வளரனுமா? இந்த 1 பொருளே போதும்! ட்ரை பண்ணி பாருங்க
நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர உதவும் சில பொருட்கள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

Hair Growth Remedies
இன்றைக்கு நிறைய பேர் முடி உதிர்தல், உடைதல் உள்ளிட்ட பல தலைமுடி சார்ந்த பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுகள், மன அழுத்தம் மற்றும் முடிக்கு தேவையான ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்றவையாகும். ஆனால் நம் வீட்டில் இருக்கும் சில பொருட்கள் முடி ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும். அவை என்னென்ன என்பதை இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
வெங்காய சாறு :
நம்முடைய முன்னோர்கள் காலத்தில் இருந்தே தலைமுடிக்கு வெங்காய சாறு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ரெண்டு பெரிய வெங்காயத்தை அதிலிருந்து சாற்றை பிழிந்து அதை உங்களது உச்சந்தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து அரை மணி நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு ஷாம்பு போட்டு குளிக்கவும். இப்படி செய்தால் ஜெட் வேகத்தில் முடி வேகமாக வளர ஆரம்பிக்கும். அதுமட்டுமல்லாமல் பொடுகு தொல்லையும் நீங்கும்.
கிரீன் டீ
கிரீன் டீயில் ஏராளமான ஆன்டிஆக்சிடன்ட்கள் உள்ளன. பொதுவாக அவை உடல் எடையை குறைப்பதற்கு தான் உதவும் என்று நாம் நினைப்போம். ஆனால், அது தலைமுடி பராமரிப்பிலும் வேலை செய்யும். ஆம், கிரீன் டீயை நேரடியாக தலைக்கு தடவுவதன் மூலம் முடியின் வேர் கால்களுக்கு நல்ல இரத்த ஓட்டத்தை வழங்கும். அதுபோல தலைக்கு குளித்து முடித்த பிறகு கிரீன் டீ தன்னிறை கொண்டு முடியை அலசி வந்தால் பொடுகு பிரச்சனை முற்றிலும் நீங்கிவிடும்.
முட்டை :
முட்டை தலை முடியின் வளர்ச்சிக்கு மிகவும் அற்புதமாக செயல்படும். முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை ஆரோக்கியமான முடிவு வளர்ச்சிக்கு உதவுகின்றன. முட்டையின் வெள்ளை கருவை ஹேர் பேக்காக போட்டு வந்தால் உங்கள் கண்களாலே நம்ப முடியாத அளவிற்கு வியக்கத்தக்க மாற்றம் உங்களது கூந்தலில் நடக்கும். முட்டை ஹேர் பேக் போட்ட பிறகு ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு ஹெர்பல் ஷாம்பு போட்டு முடியை அலசவும். முடியை பளபளப்பாக மாற்றும் முடி வளரவும் உதவுகிறது.
கற்றாழை ஜெல் :
உங்களது முடி கருமையாகவும், நீளமாகவும் வளர வேண்டுமென்றால் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம். உச்சந்தலை முதல் நுனி வரை தடவி சுமார் 20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு லேசான ஷாம்பு போட்டு குளிக்கவும். வாரத்திற்கு 2-3 முறை கற்றாழை ஜெல்லை இப்படி பயன்படுத்தி வந்தால் முடியில் நல்ல மாற்றத்தை நீங்களே பார்ப்பீர்கள்.
அரிசி நீர் :
அரிசி நீரில் நிறைந்திருக்கும் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் அமினோ அமிலங்கள் கூந்தலை பட்டு போல மென்மையாக மாற்றவும், கருமையாக மாற்றும் ஆரோக்கியமாக வளர உதவுகிறது. இதற்கு நீங்கள் அரிசி கழுத நீர் அல்லது அரிசியை வேகவைத்து வடித்த நீரை பயன்படுத்தலாம். அவற்றைக் முடியின் வேர்க்கால்கள் வரை அப்ளை செய்து சுமார் 20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு, பிறகு வழக்கம் போல ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இப்படி செய்து வந்தால் முடி பளபளவென்று இருக்கும். மேலும் சீக்கிரமாகவும் வளரும்.
வெந்தயம் :
வெந்தயம் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இது முடி உதிர்வை குறைப்பது மட்டுமில்லாமல், பொடுகையும் விரட்டும். இதற்கு 2 ஸ்பூன் வெந்தயத்தை இரவு ஊற வைத்துவிட்டு பிறகு மறுநாள் காலை ஹேர் பேக்காக போட்டு குளிக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இப்படி செய்ய வேண்டும். இந்த ஹேர் பேக் போடும்போது ஷாம்பு பயன்படுத்த வேண்டாம்.