- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Hair Growth : தேங்காய் எண்ணெய்ல இதை போட்டு தேய்ங்க; கூந்தல் நீளமா வளரும்
Hair Growth : தேங்காய் எண்ணெய்ல இதை போட்டு தேய்ங்க; கூந்தல் நீளமா வளரும்
எந்த ஒரு பொருளை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலைமுடிக்கு தடவினால் அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தலைமுடி நீதமாகவும் அடர்த்தியாகவும், இருக்க யாருதான் விரும்ப மாட்டார்கள். ஆனால் இன்றைய காலத்தில் நீளமான தலைமுடியை பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்கு கூந்தல் பராமரிப்பு மிகவும் அவசியம். பொதுவாக பெரும்பாலானோர் தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் தான் பயன்படுத்துவார்கள். ஆனால் நீங்கள் நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தலை பெற விரும்பினால் வெறும் தேங்காய் எண்ணெய் மட்டும் தேய்த்தால் போதாது. அதனுடன் ஒரு பொருளைக் கலந்து தேய்க்க வேண்டும். அது என்ன பொருள்? அதை தேங்காய் எண்ணெயில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
நீங்கள் நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தலை பெற விரும்பினால் தேங்காய் எண்ணெயில் வெந்தயம் சேர்த்து பயன்படுத்த வேண்டும். வெந்தயம் முடி ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று ஆயுர்வேதம் சொல்லுகிறது. இது முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, முடி வளர்ச்சியை தூண்டும். அதுமட்டுமின்றி, பொடுகு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது. தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஆராய்ச்சி படி, வெந்தயம் முடிக்கு மிகவும் நன்மை என்று கண்டறிந்துள்ளன. சரி இப்போது தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளலாம்.
தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை எப்படி பயன்படுத்துவது?
100 மில்லி தேங்காய் எண்ணெயில் இரண்டு ஸ்பூன் வெந்தயம் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை இலைகளை சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு எண்ணெயை ஆற வைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் அதில் வடிகட்டி நிரப்ப வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இந்த எண்ணெயை உச்சந்தலையில் தேய்த்து மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இரவில் தடவி காலையில் லேசான ஷாம்பு போட்டு குளிக்கலாம்.
இந்த எண்ணெயின் நன்மைகள் :
1. முடி வறட்சியடைவதை தடுக்கும் -
உங்களது கூந்தல் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெய் உங்களுக்கு சிறந்த தேர்வாகும். இந்த எண்ணெயை உச்சந்தலையில் தடவினால் உச்சந்தலைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் .இதனால் உங்களது தலைமுடி மென்மையாகவும், பட்டு போல மாறும். முடியின் வலிமையும் அதிகரிக்கும்.
2. முடி வளர்ச்சியை தூண்டும் -
தேங்காய் எண்ணெய் முடியின் வேர்களை வலுப்படுத்த உதவும். வெந்தயத்தில் இருக்கும் புரதம் மற்றும் நிக்கோர்ட்டினிக் அமிலம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். இவை இரண்டும் சேர்ந்து முடி வேகமாகவும், நீளமாகவும் வளர உதவும்.
முடி நரைப்பதை தடுக்கும்!
நரைமுடி பிரச்சனைகள் அவதிப்படுகிறீர்கள் என்றால் தேங்காய் எண்ணெய் மற்றும் வெந்தயம் கலந்த எண்ணெயை பயன்படுத்துங்கள். இது முடி வலிமை அதிகரிப்பது மட்டுமில்லாமல், முன்கூட்டியே முடி நரைப்பதை தடுக்கவும் உதவும்.
பொடுகை குறைக்கும்
வெந்தயம் தலைமுடியில் இருக்கும் பொடுகு பிரச்சனை குறைக்க பெரிதும் உதவுகிறது மற்றும் கூந்தலுக்கு பளபளப்பை அளிக்கும். வெந்தயத்தை மையாக அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து ஹேர் பேக்காக கூட பயன்படுத்தினால் பொடுகு தொல்லை நீங்கிவிடும்.