MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Almond Oil for Hair Growth: தலைமுடிக்கு பாதாம் எண்ணெய் இப்படி தேய்த்தால் முடி நன்றாக வளரும்!!

Almond Oil for Hair Growth: தலைமுடிக்கு பாதாம் எண்ணெய் இப்படி தேய்த்தால் முடி நன்றாக வளரும்!!

நம்மில் பலருக்கும் முடி உதிர்தல் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. இத்துடன் முடி உடைதல், முடி வளர்ச்சி குறைதல் பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறோம். இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் பாதாம் எண்ணெய் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.  

2 Min read
Author : Dhanalakshmi G
Published : Aug 21 2024, 04:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Almond Oil for Hair Growth

Almond Oil for Hair Growth

ஒவ்வொரு பெண்ணும் தனது கூந்தல் நீளமாக, அடர்த்தியாக, பளபளப்பாக, கருமையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் நூற்றுக்கு ஒரு சிலருக்கு மட்டுமே இப்படிப்பட்ட கூந்தல் இருக்கும். பலருக்கு பொடுகு, முடி உதிர்தல், வறண்ட முடி, முடி உடைதல், பலவீனமான முடி போன்ற பல பிரச்சனைகள் உள்ளன. இதனால் முடி வளர்ச்சியும் நின்றுவிடுகிறது. வருடங்கள் உருண்டோடினாலும் முடி கொஞ்சம் கூட வளராது. காற்று மாசுபாடு, மோசமான வாழ்க்கை முறை இதற்கு காரணம். ஆனால் பாதாம் எண்ணெயில் சிலவற்றை கலந்து தடவினால் உங்கள் கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும். மேலும் முடி தொடர்பான பிரச்சனைகளும் குறையும். எனவே முடி வளர்ச்சிக்கு பாதாம் எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று இப்போது பார்க்கலாம்.
 

24
கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழையில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இது முடி தொடர்பான பல பிரச்சனைகளை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் பாதாம் எண்ணெயுடன் கற்றாழை ஜெல் கலந்து தடவவும். இதற்கு ஒரு கப்பில் உங்கள் கூந்தலுக்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றவும். இதில் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து தலைக்கு தடவவும். இந்த கலவையை தலைக்கு தடவி 4 மணி நேரம் கழித்து குளித்தால் போதும். 

34
கறிவேப்பிலை

கறிவேப்பிலை

கறிவேப்பிலை கூட முடிக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். உங்கள் கூந்தல் இயற்கையாகவே நீளமாக வளர வேண்டுமானால் பாதாம் எண்ணெயுடன் கறிவேப்பிலையை கலந்து தடவவும். இதற்கு அரை கப் எண்ணெயில் 7 முதல் 8 கறிவேப்பிலை சேர்க்கவும். இப்போது இரண்டையும் கேஸ் அடுப்பில் சிறிது நேரம் சூடாக்கவும். பாதாம் எண்ணெயில் கறிவேப்பிலை சிறிது கருத்த பிறகு அடுப்பை அணைத்து எண்ணெயை ஆற விடவும். இப்போது இரவில் தலைக்கு எண்ணெய் தடவி, காலையில் குளிக்கவும். 

44
வெந்தயம்

வெந்தயம்

வெந்தயம் மூலமும் முடி தொடர்பான பல பிரச்சனைகளை குறைக்கலாம். இதற்கு ஒரு சிறிய கிண்ணத்தில் பாதாம் எண்ணெயை எடுத்து அதில் அரை டீஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது இந்த கலவையை அடுப்பில் வைத்து சூடாக்கவும். வெந்தயம் சிவக்கும் வரை கொதிக்க வைத்து பின்னர் அடுப்பை அணைக்கவும். இந்த எண்ணெய் ஆறியதும் தலைக்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். இரண்டு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளிக்கவும். இந்த மூன்று வீட்டு வைத்தியங்களையும் பின்பற்றினால் நிச்சயம் உங்கள் முடி உதிர்தல் குறையும்.  உங்கள் கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும். 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

DG
Dhanalakshmi G
செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
பேரிச்சம் பழம் வைத்து செய்த healthy Ferrero Rocher chocolate | No Sugar Chocolate recipe
Recommended image2
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image3
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved