Rosemary Oil for Hair : ரோஸ்மேரி எண்ணெய் தலைமுடிக்கு நல்லதுனு சொல்றாங்களே.. அது ஏன் தெரியுமா?
தலை முடிக்கு ரோஸ்மேரி எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நீண்ட ஆரோக்கியம் மற்றும் அழகான கூந்தலை விரும்பாதவர்கள் யாருமே இல்லை. குறிப்பாக பெண்கள் இது மாதிரியான கூந்தலை ரொம்பவே விரும்புவார்கள். இதற்காக பல பெண்கள் விலையில் இருந்த பொருட்களை தலைமுடிக்கு பயன்படுத்துகிறார்கள். இருப்பினும் அவர்களால் தங்கள் இலக்கை அடைய முடியவில்லை.
ஆனால், இந்த மாதிரியான கூந்தலை பெற, ரோஸ்மேரி எண்ணையை சிறந்த தேர்வாகும். ரோஸ்மேரி எண்ணெய் முடியை இயற்கையான முறையில் ஆரோக்கியமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மருத்துவ குணங்கள் நிறைந்த ரோஸ்மேரி எண்ணெய் முடிக்கு ஊக்கமளிக்கிறது மற்றும் முடி பிரச்சனைகளை நீக்குகிறது.
உச்சந்தலையில் இருக்கும் பொடுகை நீக்கவும், முடியை வலுப்படுத்தவும், கருமையாக்கவும், முடி உதிர்வதை தடுக்கவும், முடியை அடர்த்தியாக்கவும், ஆரோக்கியமாகவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், புதிய முடி வளரவும் இந்த எண்ணெய் பெரிதும் உதவுகிறது.
அதுமட்டுமின்றி ரோஸ்மேரி எண்ணெயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உங்கள் தலைமுடி மற்றும் உச்சம் தலையை பாதுகாப்பாக வைத்திருக்கும். இதன் உதவியுடன் உங்கள் முடி வலுவடைகிறது.
முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து விடுபட தேங்காய் எண்ணெயில், ரோஸ்மேரி எண்ணெய் கலந்து தலை முடியில் தடவி, பிறகு நன்கு மசாஜ் செய்யவும்.15 நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்கவும்.
இதையும் படிங்க: 30 நாட்களில் உங்கள் முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் கொட்டாமலும் வளர 'இத' பண்ணுங்க!
உங்கள் தலை முடி நரைத்திருந்தால் ரோஸ்மேரி எண்ணெயுடன் சிறிது பாதாம் எண்ணெய் சேர்த்து தலையில் தடவி மசாஜ் செய்யவும். இந்த இரண்டு எண்ணெய்களும் கூந்தலின் கொலாஜனை அதிகரித்து முடியின் நிறத்தை மேம்படுத்தும். விரைவில் வெள்ளை முடி கருப்பாகும். அதுபோல தலையில் பொடுகு, அரிப்பு நீங்க ரோஸ்மேரி எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்.
இதையும் படிங்க: 15 நாள் தொடர்ந்து "இந்த" ஆயில் யூஸ் பண்ணுங்க...முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் மாறும்..!
கூந்தலின் பளபளப்பை அதிகரிக்க ரோஸ்மேரி 3 ஸ்பூன் எண்ணெயில் 3 ஸ்பூன் மருதாணி பொடி கலந்து கூந்தலில் தடவவும். பிறகு ஷாம்பு போட்டு குளிக்கவும். இதன் மூலம் முடி உதிர்தல் பிரச்சனைகள் இருந்து விடுபடலாம் மற்றும் முடியும் பொலிவடையும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D