இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:55 PM (IST) Sep 08
Kaliammal Plan to Karthik Raja : சிறையிலிருந்து வெளியில் வந்த காளியம்மாள் கார்த்திக்கிற்கு ஸ்கெட்ச் போடுகிறார். அதிலிருந்து கார்த்திக் தப்பிப்பாரா என்பது பற்றி பார்க்கலாம்.
11:09 PM (IST) Sep 08
10:28 PM (IST) Sep 08
இந்தியாவின் 17-வது துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. NDA வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பி. சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். BJD மற்றும் BRS போன்ற கட்சிகள் தேர்தலைப் புறக்கணிக்கின்றன.
10:22 PM (IST) Sep 08
2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா பயன்படுத்திய வெற்றி உத்தியை இந்தியா ஆசிய கோப்பையில் இழக்கும் என்று முகமது கைப் தெரிவித்துள்ளார்.
10:05 PM (IST) Sep 08
செயற்கை நுண்ணறிவின் முன்னோடி ஜியோஃப்ரி ஹிண்டன், AI தொழில்நுட்பம் வேலையின்மையைத் தூண்டி, ஒரு சிலரின் கைகளில் செல்வத்தைக் குவிக்கும் என எச்சரிக்கிறார். கூகுளை விட்டு விலகிய அவர், AI-யின் அபாயங்கள் குறித்துப் பேசுகிறார்.
10:02 PM (IST) Sep 08
Karthigai Deepam 2 Serial Today Episode : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் மாயா கார்த்திக் பற்றிய உண்மையை சாமுண்டீஸ்வரியிடம் சொல்ல அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
09:53 PM (IST) Sep 08
வாட்ஸ்அப் செயலி மற்றும் இணையதள சேவையில் ஏற்பட்ட திடீர் முடக்கம், பயனர்களைத் திணறடித்தது. இது ஏன் நடந்தது, இதற்குப் பின்னால் உள்ள தொழில்நுட்ப காரணங்கள் என்ன என்பதைப் பற்றிய முழு விவரங்கள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.
09:48 PM (IST) Sep 08
பள்ளி, கல்லூரிகளுக்கு செப்டம்பர் 11ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
09:42 PM (IST) Sep 08
Anuradha Talk About Silk Smitha death secrets : சில்க் ஸ்மிதா உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இருந்ததாகவும், தான் அழைத்தபோது சென்றிருந்தால் இந்த சோகம் நிகழ்ந்திருக்காது என்றும் அனுராதா தெரிவித்துள்ளார்.
09:01 PM (IST) Sep 08
Madharaasi Box Office Collection Day 3 Report : சிவகார்த்திகேயனின் அமரன் மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிலையில் மதராஸி படமும் ஹிட் கொடுத்துவிடும் என்று எண்ணிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு மதராஸி வசூல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.
08:50 PM (IST) Sep 08
டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
08:29 PM (IST) Sep 08
08:13 PM (IST) Sep 08
Raji Ready to Leave From Dance Competition : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 570ஆவது எபிசோடில் ராஜீ டூயட் ரவுண்டில் ஆட மறுத்த நிலையில் அங்கிருந்து புறப்பட்டு செல்ல முயற்சித்தார்.
07:50 PM (IST) Sep 08
கன்னியாகுமரி கண்ணாடி பாலம் விரிசலுக்கான காரணம் குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
07:49 PM (IST) Sep 08
Shakthi Thirumagan Trailer Released : விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் சக்தி திருமகன் படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.
07:19 PM (IST) Sep 08
விசிகவினரின் தாக்குதலுக்கு உள்ளான ஏர்போர்ட் மூர்த்தியைக் கைது செய்ததற்காக, திமுக அரசையும் முதல்வர் ஸ்டாலினையும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். கருணாநிதி ஆட்சியை விட மோசமான ஆட்சியை ஸ்டாலின் நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
07:12 PM (IST) Sep 08
1998 அணுசக்தி சோதனைகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான ஐ.நா. தடைகளுக்கு ஆதரவாக உக்ரைன் வாக்களித்தது. ஜெலென்ஸ்கி ஆட்சி காலத்தில், 2019 -ல் இந்தியா 370 வது பிரிவை ரத்து செய்ய முடிவு செய்த பின்னர், காஷ்மீரில் சர்வதேச தலையீட்டை உக்ரைன் ஆதரித்தது.
07:09 PM (IST) Sep 08
ஒரு வழக்கில் நடவடிக்கை எடுக்காததால் கைது செய்யப்பட்ட காஞ்சிபுரம் டிஎஸ்பி, சிறை வாசலில் இருந்து தப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
06:48 PM (IST) Sep 08
தனக்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏ பண்ணாரிகூட திடீரென எடப்பாடி பக்கம் சாய்ந்து விட்டார். இதையெல்லாம் கூட்டிக் கழித்து அரசியல் கணக்குப் போட்டு வருகிறார் செங்கோட்டையன். திடீரென அண்ணாமலையார் துணையே என்ற மனநிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது
06:47 PM (IST) Sep 08
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா விதிக்கும் வரிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆதரவு தெரிவித்துள்ளார். தியான்ஜின் உச்சிமாநாட்டில் மோடி, புதின் மற்றும் ஜின்பிங் சந்திப்புக்குப் பின் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
06:22 PM (IST) Sep 08
Ashok Injured During Vada Manju Virattu Movie Shooting : நடிகர் முருகா அசோக்கை காளை ஒன்று தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
06:08 PM (IST) Sep 08
உங்கள் சமையல் சுவையை அதிகரிக்க உதவும் சில சிம்பிள் குக்கிங் டிப்ஸ்கள் இங்கே.
05:54 PM (IST) Sep 08
டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்ப்போம்.
05:46 PM (IST) Sep 08
05:40 PM (IST) Sep 08
அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் சீனியர் தலைவர்களை அழைத்து அவர்களை சமாதானம் செய்வதற்காக பொறுப்புகளை நீங்கள் கவனியுங்கள் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து அன்பாகப் பேசி தங்கள் பக்கம் வளைத்து வருவதாகவும் கூறுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
05:36 PM (IST) Sep 08
செப்டம்பர் 9, 2025 தேதி துலாம் ராசிக்கான ராசி பலன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:29 PM (IST) Sep 08
இளநரை பிரச்சனையை தடுக்க சாப்பிட வேண்டிய சில சூப்பரான உணவுகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
05:25 PM (IST) Sep 08
செப்டம்பர் 9, 2025 தேதி விருச்சிக ராசிக்கான ராசி பலன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:17 PM (IST) Sep 08
செப்டம்பர் 9, 2025 தேதி தனுசு ராசிக்கான ராசி பலன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:09 PM (IST) Sep 08
அதிமுகவினர் ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தியதற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவே ஆம்புலன்ஸில் செல்லும் என்று அவர் கூறியுள்ளார்.
05:08 PM (IST) Sep 08
செப்டம்பர் 9, 2025 தேதி மகர ராசிக்கான ராசி பலன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:00 PM (IST) Sep 08
செப்டம்பர் 9, 2025 தேதி கும்ப ராசிக்கான ராசி பலன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:52 PM (IST) Sep 08
நேபாளத்தில் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறி, பலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் காயமடைந்துள்ளனர்.
04:51 PM (IST) Sep 08
செப்டம்பர் 9, 2025 தேதி மீன ராசிக்கான ராசி பலன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:48 PM (IST) Sep 08
‘‘இயக்கம் தான் பெரிது தனி நபர் அல்ல. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பக்கம் துணை நிற்போம். அவரது தலைமையை வலுப்படுத்துவோம்’’ என உறுதிபடத் தெரிவித்துள்ளார் பண்ணாரி எம்.எல்.ஏ.
04:42 PM (IST) Sep 08
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல் சாணாங்குப்பம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், 5 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
04:40 PM (IST) Sep 08
04:39 PM (IST) Sep 08
செப்டம்பர் 17 ஆம் தேதி உருவாகவுள்ள ராஜயோகத்தால் சில ராசிகளின் வாழ்க்கை பிரகாசிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
04:20 PM (IST) Sep 08
திருப்பத்தூர் மாவட்ட திமுக நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பாரதி என்பது தெரியவந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும், திருடிய நகைகளை விற்று வணிக வளாகம் கட்டி உள்ளதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
04:18 PM (IST) Sep 08
எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தால் அதிமுக.வில் இருந்து ஒவ்வொரு முக்கிய தலைவராக வெளியேற்றப்பட்டு வருவதால் அக்கட்சி பலவீனமடைந்து வருவதோடு இது திமுக.வுக்கு சாதகமாக மாறி வருகிறது.