Kaliammal Plan to Karthik Raja : சிறையிலிருந்து வெளியில் வந்த காளியம்மாள் கார்த்திக்கிற்கு ஸ்கெட்ச் போடுகிறார். அதிலிருந்து கார்த்திக் தப்பிப்பாரா என்பது பற்றி பார்க்கலாம்.

Kaliammal Plan to Karthik Raja : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம் 2. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு கார்த்திகை தீபம் 2 சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் எபிசோடில் கான்ஸ்டபிள் கொலை செய்யப்பட்டதில் பரமேஸ்வரி மீது சந்தேகம் இருப்பதாக கூறி போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இதன் காரணமாக கார்த்திக் யார் அந்த கொலையை செய்தது என்று கண்டுபிடிக்க தொடங்கினர். முதலில் கல்யாண மண்டபத்தின் சிசிடிவி கேமராவை சோதனை செய்தனர். அதில் மாயா கையில் துப்பாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை வைத்து அவர் தான் கான்ஸ்டபிளை கொலை செய்தார் என்று சொல்லிவிட முடியாது. மாறாக அவராகவே தனது குற்றத்தை ஒத்துக் கொள்ள வேண்டும். அதற்கு மாயாவை வலையில் விழ வைக்க வேண்டும் என்று கருதிய கார்த்திக் பிளான் போட்டு அதனை சரியாகவும் செய்து முடித்து மாயாவை ஒத்துக் கொள்ள வைத்தார்.

அதோடு கடந்த வாரம் எபிசோடு முடிந்தது. இதைத் தொடர்ந்து, இந்த வாரத்திற்கான எபிசோடு தொடங்கியது. இதில் மாயாவை கையோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று போலீசிடம் ஒப்படைத்துவிட்டு பரமேஸ்வரியை நிரபராதி என்று கார்த்திக் வெளியில் அழைத்து வந்தார்.

அதன் பிறகு சாமுண்டிஸ்வரிக்கு தனது மகள் ரேவதியை கொலை செய்ய திட்டமிட்டது மாயா என்றும், அதில் கான்ஸ்டபிள் மாட்டிக் கொண்டார் என்றும் தெரிய வர, அவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று மாயாவை எச்சரித்தார். அப்போது, அவர் கார்த்திக் தான் பரமேஸ்வரியின் பேரன் என்று சொல்கிறார். இதை நம்பாத சாமுண்டீஸ்வரி அங்கிருந்து புறப்பட்டு வருகிறார். இதற்கிடையில் காளியம்மாள் சிறையிலிருந்து வெளியில் வருகிறார்.

இது ஒரு புறம் இருக்க மறுபுறம் கான்ஸ்டபிள் இறப்பதற்கு முன்னதாக செல்போன் பற்றி சொன்னதாக அவர் கூறவே, அதைப் பற்றி கார்த்திக் விசாரிக்கிறார். அதாவது, காளியம்மா ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே வருகிறாள். சந்திரகலா, சிவனாண்டி ஆகியோர் அவளை சந்திக்கின்றனர், அந்த சாமுண்டீஸ்வரியை எதாவது பண்ணனும் என்று சொல்ல காளியம்மா தனது அடுத்த திட்டத்தை சொல்கிறாள்.

சந்திரகலா உடனே இதை செய்யணுமா என்று கேட்க கார்த்தியை அழிக்கணும்னா இதை செய்து தான் ஆகணும் என்று சொல்கிறாள். தொடர்ந்து மறுபக்கம் பரமேஸ்வரி பாட்டி ஜோசியரை வர வைத்து நவீன் துர்காவின் சாந்திமுகூர்த்தத்திற்கு நாள் குறிக்கிறார். அப்படியே கார்த்திக் ரேவதிக்கும் நாள் குறிக்க கார்த்திக் இதெல்லாம் இப்போ எதுக்கு என்று கேட்க பாட்டி அமைதியா இரு என்று அவனை அடக்குகிறாள்.