Ashok Injured During Vada Manju Virattu Movie Shooting : நடிகர் முருகா அசோக்கை காளை ஒன்று தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Ashok Injured During Vada Manju Virattu Movie Shooting : கிராமத்து கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் படம் தான் வட மஞ்சு விரட்டு. இந்த படத்தில் இளம் நடிகர் முருகா அசோக் ஹீரோவாக நடித்து வருகிறார். மஞ்சு விரட்டு காட்சிகள் இந்தப் படத்தில் அதிகளவில் இடம் பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி கிராமத்து மண் வாசனை, கலாச்சாரம் சார்ந்த காதல் கதைகளும் படத்தில் இடம் பெற்றுள்ளன. இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் சுற்றிய பகுதிகளில் நடந்து வருகிறது. சங்கிலி CPA இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அழகர் பிக்சர்ஸ் சார்பில் புதுகை ஏ.பழனிச்சாமி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் தான் திண்டுக்கல் அஞ்சுக்குளிப்பட்டி என்ற பகுதியில் காளையுடன் நடிகர் அசோக் நடிக்கும் காட்சி படமாக்கப்பட இருந்தது. அப்போது அவர் காளையுன் பேசி அருகில் செல்ல முயற்சித்த போது காளை அவரை முட்டி தூக்கி எறிந்தது. இதி, அவரது வயிற்றுப் பகுதியிலிருந்து மார்பு பகுதி வரை காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும், படப்பிடிப்பை ரத்து செய்யலாம் என்று சொன்ன போது, தயாரிப்பாளர், கலை இயக்குநர், மாடு பிடி வீரர்கள் என்று அனைவரது உழைப்பும், கடின முயற்சியும் வீணாகிவிடும். அதனால், ரத்து செய்ய வேண்டாம், என்று கூறி உடனடியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து நடிகர் அசோக் கூறியிருப்பதாவது: அந்த காளையின் பெயர் பட்டாணி. நன்கு பழக்கப்பட்டது தான். இருந்தும் அன்று அந்த காளைக்கு என்ன ஆனது என்று தெரியவிலை. என்னை தூக்கி எறிந்துவிட்டது. மனிதர்களுக்கு கோபம் வந்தால் வார்த்தைகளில் வெளிப்படுத்துவார்கள். அப்படியிருக்கும் போது இந்த விலங்குகள் என்ன செய்யும்? விலங்குகள் இப்படித்தான் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும். ஆனால், அதன் பிறகு என்ன ஆச்சு தெரியுமா? பட்டாணி என்னை தாக்கிய பிறகு சோகத்தில் கண்ணீர் விட்டு விட்டது என்று கூறியுள்ளார்.
இதே போன்று இந்த விபத்து குறித்து பேசிய அசோக், இந்த காயம் சற்று ஓரங்குலம் நகர்ந்து இருந்தால் மார்பில் தாக்கியது. இன்னும் ஆழமாக இறங்கியிருந்தால் நுரையீரலை கிழித்திருக்கும். மார்பின் வலி கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது. நான் சிவனின் வாகனம் என்பதால், சிவன் தான் என்னை காப்பாற்றினார். காளை கொடுத்தது காயம் அல்ல, சிவனின் நந்தி வாகனம் பட்டாணியாக வந்து எனக்கு குத்திய பச்சை என்று கூறியுள்ளார்.
நடிகர் அசோக் இதர்கு முன்னதாக, முருகா, பிடிச்சிருக்கு, கோழி கூவுது, காங்ஸ் ஆப் மெட்ராஸ், மாயத்திரை' ஆர் யூ ஓகே பேபி, பெஸ்டி, மாயப்புத்தகம், லாரா என்று 25க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
