- Home
- Politics
- சசிகலா- ஓபிஎஸை ஒருங்கிணைப்பதெல்லாம் வேலைக்காது... வீணாகிப்போன அஸ்திரம்..! ரூட் மாறும் செங்கோட்டையன்..?
சசிகலா- ஓபிஎஸை ஒருங்கிணைப்பதெல்லாம் வேலைக்காது... வீணாகிப்போன அஸ்திரம்..! ரூட் மாறும் செங்கோட்டையன்..?
தனக்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏ பண்ணாரிகூட திடீரென எடப்பாடி பக்கம் சாய்ந்து விட்டார். இதையெல்லாம் கூட்டிக் கழித்து அரசியல் கணக்குப் போட்டு வருகிறார் செங்கோட்டையன். திடீரென அண்ணாமலையார் துணையே என்ற மனநிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது

அதிமுகவின் சீனியர் தலைவராகவும், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள செங்கோட்டையன் திரிசங்கு சொர்க்கத்தில் இருக்கிறார். செங்கோட்டையனுக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே உட்கட்சி மோதல்கள் உச்சம் தொட்ட பின்னணியில் பாஜகவுடன் அவருக்கு மறைமுக தொடர்பு இருக்கலாம் என விவாதங்கள் கிளம்பி உள்ளன. ஏற்கெனவே 2025 மார்ச் மாதம் செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக தகவல்கள் இருக்கின்றன. இதுவும் பாஜகவுடன் அவரது அரசியல் நகர்வு குறித்த வியூகங்களை தூண்டியுள்ளது. செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று கூறியதன் பின்னணியில் பாஜகவின் ஆதரவு இருக்கலாம் என்று தமிழக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
ஆனால், செங்கோட்டையன் தன்னை அதிமுகவின் உறுதியான தொண்டனாகவே கூறி வருகிறார். 2024 மே மாதம், பாஜகவில் மாநிலத் தலைவர் பதவி வழங்கினால் இணைவார் என்ற செய்தியை அவர் மறுத்து, அதிமுகவிற்கு விசுவாசமாக இருப்பதாக வலியுறுத்தினார். ஆனால் அவரது தற்போதைய செயல்பாடுகள், முன்பு பாஜக தலைவர்களுடனான சந்திப்புகள் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளன.
பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 5ம் தேதி பேட்டியளித்தார் செங்கோட்டையன். மறுநாள் செங்கோட்டையனையும் அவரது ஆதரவாளர்களையும் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. அன்று நண்பகல் 12:00 மணிக்கே ஈரோடு மேற்கு மாவட்ட நிர்வாகிகள் 250 பேரை தன்னுடைய தோட்டத்து பங்களாவுக்கு வரவழை த்து பேசியுள்ளார் செங்கோட்டையன். காலக்கெடு கொடுத்த தனக்கே செக் வைத்து விட்டார் எடப்பாடி பழனிசாமி.
சசிகலா, டிடிவி.தினகரன், ஓபிஎஸ்ஐ நம்பி போகலாம் என்றால் அது வேலைக்காகாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டாராம் செங்கோட்டையன். கவுண்டர் பாலிடிக்ஸ் நகர்த்த விரும்புகிறார் சசிகலா. திமுகவிலிருந்தும் சிக்னல் கிடைக்கவில்லை. பதவி இல்லை என்றால் பார்க்க வந்த கூட்டம்கூட இனி வருமா எனத் தெரியாது எனப் புலம்பியதாக கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். தனக்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏ பண்ணாரிகூட திடீரென எடப்பாடி பக்கம் சாய்ந்து விட்டார். இதையெல்லாம் கூட்டிக் கழித்து அரசியல் கணக்குப் போட்டு வருகிறார் செங்கோட்டையன். திடீரென அண்ணாமலையார் துணையே என்ற மனநிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்போது இந்த ஒத்த கருத்துடையவர்களை இயக்குவது யார்? அண்ணாமலை தான் என்கிறார்கள். ‘‘என் பதவியை பறித்த உன்ன தூங்க விடமாட்டேன்’’ என சபதம் எடுத்திருக்கிறார் அண்ணாமலை. இபிஎஸ்ஸுக்கு எதிராக காய் நகர்த்துவதும் அவர்தான். அதனாலதான் ஓபிஎஸ், டிடிவி.தினகரன் என எல்லாரும் பாஜகவையும், நைனாரையும் பேசினாலும் அண்ணாமலை ரொம்ப நல்லவர் என சர்டிபிகேட் கொடுத்து வருகிறார்கள். அண்ணாமலை காய் நகர்த்துவது எதற்காக இதற்கு செவி சாய்குமா டெல்லி தலைமை. அண்ணாமலையை பொருத்தவரை இபிஎஸை தோற்கடிக்க வேண்டும். உன் விரலை வைத்து உன் கண்ணையே குத்துகிறேன் என்றுதான் சசிகலா, ஓபிஎஸ். டிடிவி, செங்கோட்டையன தூண்டிவிடுகிறார்.
நைனாரை விட நான் தான் பாஜகவுக்கு பொருத்தமான ஆள் என்பதை டெல்லி தலைமைக்கு உணர்த்த வேண்டும் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப் பார்கிறார் என்கிறார்கள். ஆனால், அண்ணாமலையின் உள்குத்துக்களை ஏற்கனவே அமித் ஷாவுக்கு பாஸ் பண்ணி விட்டார் இபிஎஸ் என்கிறார்கள். ஆக, இனி அண்ணாமலை ஆட்டம் தொடருமா? அல்லது டெல்லி அண்ணாமலை ஆடவிட்டு வேடிக்கை பார்க்குமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.