- Home
- Politics
- அதிருப்தியாளர்கள் குஷியோ குஷி..! ஜாக்பாட்டை அள்ளி வீசிய எடப்பாடி..! சீனியர்களை தக்க வைக்க சதுரங்க வேட்டை வியூகம்..!
அதிருப்தியாளர்கள் குஷியோ குஷி..! ஜாக்பாட்டை அள்ளி வீசிய எடப்பாடி..! சீனியர்களை தக்க வைக்க சதுரங்க வேட்டை வியூகம்..!
அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் சீனியர் தலைவர்களை அழைத்து அவர்களை சமாதானம் செய்வதற்காக பொறுப்புகளை நீங்கள் கவனியுங்கள் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து அன்பாகப் பேசி தங்கள் பக்கம் வளைத்து வருவதாகவும் கூறுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

செங்கோட்டையனை பதவி நீக்கம் செய்ததன் மூலம் எடப்பாடி பழனிசாமி எதற்கும் தயாராக இருக்கிறார் என்று தானே அர்த்தம். எப்போதே செங்கோட்டையனை கழட்டி விட்டுவிட்டார் இபிஎஸ். இனி சாண் போனால் என்ன? முலம் போனால் என்ன? என்கிற மனநிலையில் தான் செங்கோட்டையன் இருக்கிறார். ஆனால் செங்கோட்டையனை கழட்டி விட்டுட்டு வேறு யாரையும் கொண்டு வந்து இங்கே நிறுத்துவது, மற்ற விவகாரங்கள் செய்தால் அதிமுகவை தோற்கடிக்காமல் விடமாட்டோம் என்கிறது அவருடைய ஆதரவாளர்கள் வட்டம்.
ஆனால் இபிஎஸ் தரப்பில் செங்கோட்டையனை கூண்டோடு காலி செய்ய வேண்டும் என கங்கணம்கட்டி அவரது ஆதரவாளர்கள் ஏழு பேரின் பொறுப்புகளையும் பறித்திருக்கிறார் இபிஎஸ். அதேபோன்று ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்படும் வரை மாவட்ட கட்சி பணிகளை மேற்கொள்வதற்காக கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சர்ருமான ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ-வை நியமித்திருக்கிறார். 2026 தேர்தலில் செங்கோட்டையனுக்கு சீட்டும் கொடுக்கக்கூடாது என முடிவெடுத்து இருக்கிறார்கள்.
இப்போது தனக்கு எதிராக களமாடியவர்களுக்கு ஜாக்பாட்டை கொடுத்து வருகிறார் இபிஎஸ் என்கிறார்கள். இது ஒரு பக்கம் போக ஈபிஎஸின் மகன் மிதுன் ஒரு பக்கம் காய் நகர்த்திக் கொண்டு இருக்கிறார். தர்மபுரி மாவட்டத்தில் இருந்து முன்னாள் எம்எல்ஏ சிங்காரம், ‘‘செங்கோட்டையனுக்கு எதிராக நாங்க தீர்மானம் ஏற்றுகிறோம்’’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு மிதுன் ‘‘அதெல்லாம் வேணாங்க. நீங்க புதுசா எதையும் கிளப்பாதீங்க. ஏற்கனவே அந்த மாவட்ட செயலாளர் கே.பி அன்பழகன் இருக்கிறார். அவர் பாத்துக்குவாரு. நீங்க இதுல தலையிடாதீங்க’’ என்று சொல்லி இருக்கிறார். அப்படி சொன்ன கையோடு கே.பி.அன்பழகனுக்கு போன் போட்டு, ‘‘அண்ணே... உங்க லிமிட்டுல 5 சட்டமன்ற தொகுதிகள் வருது. யாருக்கெல்லாம் எம்எல்ஏ சீட்டு கொடுக்கலாம் என்று நினைக்கிறீர்கள்? என்று ஒரு லிஸ்ட் அனுப்புங்க. பொதுச்செயலாளர் உங்ககிட்ட கேட்க சொன்னாரு’’ எனச் சொல்லி இருக்கிறார்.
இதைக் கேட்டவுடன் கே.பி.அன்பழகன் ரொம்பவே குஷி ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள். பொதுவாக எம்.எல்.ஏ சீட் தேர்வு விவகாரம் எல்லாம் நேரடியாக பொதுச் செயலாளர்தான் முடிவு செய்வார். அவர்தான் யாரை எம்எல்ஏ- ஆக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்வார். ஆனால் நம்மிடம் பொறுப்பைக் கொடுக்கிறார்களே என ரொம்பவே அகமகிழ்ந்து போய் இருக்கிறார் கே.பி.அன்பழகன். ஆனால் அதற்கு பின்னணியில் நிதானமாக காய் நகர்த்துகிறார் எடப்பாடி பழனிசாமி. அதிருப்தி அணியில கே.பி.அன்பழகனும் ஒருவர். இப்போது செங்கோட்டையனை பழிவாங்க வேற வாய்ப்பை தேடுகிறார் எடப்பாடி பழனிசாமி.
சிங்காரம் போன்றவர்களை வைத்து வேலை செய்தால் கே.பி.அன்பழகன் மேலும் அதிருப்திக்கு உள்ளாவார். அது தங்களுக்கு எதிராகவே முடியும், எனவே அதிருப்தியாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தங்கள் பக்கம் திருப்பும் யுக்தி இது என்கிறார்கள். அதன்படி அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் சீனியர் தலைவர்களை அழைத்து அவர்களை சமாதானம் செய்வதற்காக பொறுப்புகளை நீங்கள் கவனியுங்கள் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து அன்பாகப் பேசி தங்கள் பக்கம் வளைத்து வருவதாகவும் கூறுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.