- Home
- Tamil Nadu News
- 15 ஆண்டாக பஸ்ஸில் திருடுவது தான் பொழப்பு! கைதான திமுக ஊராட்சி மன்ற தலைவர் அதிர்ச்சி வாக்குமூலம்!
15 ஆண்டாக பஸ்ஸில் திருடுவது தான் பொழப்பு! கைதான திமுக ஊராட்சி மன்ற தலைவர் அதிர்ச்சி வாக்குமூலம்!
திருப்பத்தூர் மாவட்ட திமுக நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பாரதி என்பது தெரியவந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும், திருடிய நகைகளை விற்று வணிக வளாகம் கட்டி உள்ளதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றத்தை சேர்ந்தவர் வரலட்சுமி (50). இவர், கடந்த ஜூலை மாதம் 14ம் காஞ்சிபுரத்தில் இருந்து அரசு பேருந்தில் சென்னை திரும்பியுள்ளார். அப்போது அவரது பையில் இருந்த 5 சவரன் நகையை பெண் ஒருவர் உதவுவது போல நடித்து திருடி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து கோயம்பேடு பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது நகையை திருடியது திருப்பத்தூர் மாவட்டம் திமுக நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பாரதி பாரதி (51) என்பவர் நகையை திருடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நகை திருட்டு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் பாரதியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். அதாவது நான், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி என பல்வேறு இடங்களில், ஓடும் பேருந்துகளில் பெண்களின் கவனத்தை திசை திருப்பி, நகை திருடி உள்ளேன். நல்லவள் போல குழந்தைகளுடன் பேச்சு கொடுத்து, நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளேன். நகையை திருடியதும் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி சென்று விடுவேன். கடந்த 15 ஆண்டுகளாக, திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். திருடிய நகைகளை விற்று கிடைத்த பணத்தில் சொந்த ஊரில் வணிக வளாகம் கட்டி உள்ளேன்.
அதன் மூலமும் எனக்கு மாதம் நல்ல வாடகை வருகிறது. ஊராட்சி மன்ற தலைவியான பின் திருட்டு தொழிலை விட்டு விடும் படி உறவினர்கள் எவ்வளவு அறிவுறுத்தினர். ஆனால் என்னால் திருடும் பழக்கத்தை விட முடியவில்லை. பணம், புகழ், வசதிகள் வந்த பின்னரும், திருடும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்காக, இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இனி திருடவே கூடாது என ஒவ்வொரு முறையும் நினைப்பேன். ஆனால் பணம் நகைகளை பார்த்ததும் எப்படியாவது அவற்றை திருட வேண்டும் என என் மனதும் சொல்லும். அதனால் வேறு வழியின்றி தான் திருடினேன். என் திருட்டு பழக்கத்தால் கூனி குறுகி நிற்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள் என பாரதி தெரிவித்துள்ளார்.