MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.48,000 டெபாசிட்.! வெளியான அசத்தல் அறிவிப்பு.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.?

பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.48,000 டெபாசிட்.! வெளியான அசத்தல் அறிவிப்பு.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.?

School Student: தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 16 2026, 02:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
என்எம்எம்எஸ் உதவித்தொகை திட்டம்
Image Credit : our own

என்எம்எம்எஸ் உதவித்தொகை திட்டம்

பள்ளி மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்குத் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் (NMMS-National Means-cum-Merit Scholarship Scheme) மத்திய அரசு கல்வி அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.

25
 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை
Image Credit : our own

9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை

இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு எழுதும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அடுத்த 4 ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.48,000 உதவித்தொகை கிடைக்கும். அதாவது ஒவ்வொரு ஆண்டும் ரூ.12,000 வீதம் மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

Related Articles

Related image1
சம்பள உயர்வு! தமிழக அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி! குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள்!
Related image2
NDA கூட்டணியில் தவெகவிற்கு 60 சீட்? விஜய்க்கு துணை முதல்வர் பதவியா? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்!
35
மதிப்பெண் விவரங்கள் வெளியானது
Image Credit : our own

மதிப்பெண் விவரங்கள் வெளியானது

அதன்படி 2025-2026-ம் அதாவது நடப்பு கல்வியாண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு அரசு தேர்வு இயக்கத்தால் ஜனவரி 10ம் தேதி சனிக்கிழமை நடத்தப்பட்டது. இத்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் கடந்த பிப்ரவரி 18 -ம் தேதி வெளியிடப்பட்டது.

45
இறுதிப் பெயர் பட்டியல் வெளியானது
Image Credit : our own

இறுதிப் பெயர் பட்டியல் வெளியானது

இருப்பினும், மாணவர்களின் பிறந்த தேதி, இனப்பிரிவு உள்ளிட்ட திருத்தங்களுக்கு கடந்த பிப்ரவரி 18 முதல் 24-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பெறப்பட்ட விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொண்டு தற்போது தேர்வானவர்கள் இறுதிப் பெயர் பட்டியல் நேற்று பள்ளிகளின் பெயர்களோடு வெளியிடப்பட்டுள்ளது.

55
தமிழகம் முழுவதும் 6,695 மாணவர்கள் தகுதி
Image Credit : our own

தமிழகம் முழுவதும் 6,695 மாணவர்கள் தகுதி

அதன்படி, தமிழகம் முழுவதும் 6,695 மாணவர்கள் தகுதி பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளனா். இந்த ஊக்கத்தொகைக்கான தெரிவுப்பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் (other Examinations) தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு முடிவுகள் என்ற பக்கத்தில் காணலாம். மேலும், இந்த பட்டியல் பள்ளிக் கல்வி இயக்ககத்தால் பிற தகுதிகள் சார்ந்த பரிசீலனைக்கு உட்பட்டதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 5,800க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 285 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
பள்ளிகள்
தமிழ்நாடு
உதவித்தொகை
தேர்வு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
விஜய் அரசியலுக்கு வந்தது முதலமைச்சர் ஆக !...துணை முதல்வர் பதவிக்கு இல்லை ! செங்கோட்டையன் பேட்டி
Recommended image2
சசிகலா, ராமதாசுடன் தவெக கூட்டணியா? ஒரே போடு போட்டு அரசியல் அரங்கை அதிரவிடும் CTR நிர்மல்குமார்
Recommended image3
தமிழகமா..? போதை மாஃபியாக்களின் வேட்டைக்காடா..? திமுக அரசின் முகத்திரையைக் கிழிக்க அதிமுக அறைகூவல்..!
Related Stories
Recommended image1
சம்பள உயர்வு! தமிழக அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி! குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள்!
Recommended image2
NDA கூட்டணியில் தவெகவிற்கு 60 சீட்? விஜய்க்கு துணை முதல்வர் பதவியா? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved