- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Grey Hair : 30 வயசுலயே இளநரையா? தினமும் இந்த 5 உணவில் ஒன்னு சாப்பிட்டா முடி கருகருனு மாறும்
Grey Hair : 30 வயசுலயே இளநரையா? தினமும் இந்த 5 உணவில் ஒன்னு சாப்பிட்டா முடி கருகருனு மாறும்
இளநரை பிரச்சனையை தடுக்க சாப்பிட வேண்டிய சில சூப்பரான உணவுகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

Foods That Prevent Grey Hair
வயதான பிறகு முடி நரைப்பது இயற்கையான விஷயம். ஆனால் இளம் வயதிலேயே நரைப்பது தான் பிரச்சனை. 40 வயதிற்கு பிறகு ஒன்னு இரண்டு முடிகள் நரைக்க தொடங்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் 20, 30 வயதிலேயே இளநரை வருகிறது. மரபியல், வாழ்க்கை முறை, உணவு தலைமுடி பராமரிப்பு என பல காரணங்களால் இந்த பிரச்சனை அதிகமாக ஏற்படுகிறது. இளநரையை தடுக்க சில உணவுகள் உதவும். அவை என்னென்ன உணவுகள் என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
இளநரை வருவதற்கான காரணங்கள் :
நிபுணர்களின் கூற்றுப்படி, தலைமுடிக்கு தேவையான வைட்டமின்கள், மினரல்கள், நுண் ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளை சாப்பிடுதல், அதிகமாக சூரிய ஒளியில் தலைமுடியை காட்டுதல் மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் ஆகியவை தான் இளம் வயதிலேயே தலைமுடி வேகமாக நரைப்பதற்கு காரணமாக அமைகின்றது.
கறிவேப்பிலை
தலைமுடி ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்த பொக்கிஷம் எதுவென்றால் கறிவேப்பிலை தான். இது தலை முடியை கருப்பாக மாற்றும் மற்றும் இளநரை வராமல் தடுக்க உதவுகிறது. ஆனால் இதன் அருமை தெரியாமல் நம்மில் பலர் இதை குப்பையில் வீசுகிறோம். கறிவேப்பிலை தலைமுடியின் ஆழம் வரைக்கு சென்று முடியின் மெலனின் உற்பத்தியை ஊக்குவிக்க உதவுகிறது. தினமும் வெறும் வயிற்றில் புதிய 10 கறிவேப்பிலை இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் விரைவில் நல்ல பலனை காண்பீர்கள்.
நெல்லிக்காய்
நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. அவை முடியின் வேர்க்கால்களுக்கு சென்று நிறமியை மாற்ற உதவுகிறது. எனவே இளநரை வருவதை தடுக்கவும் மற்றும் தவிர்க்கவும் நெல்லிக்காயை ஜூஸாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது தினமும் ஒன்று சாப்பிடலாம்.
கருப்பு எள்
கருப்பு என்னும் தலைமுடி ஆரோக்கியத்திற்கு ஒரு சூப்பரான உணவு என்று சொல்லலாம். இது ஆக்சிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து தலைமுடியை மீட்க வேலை செய்யும். இதில் இருக்கும் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து தலைமுடி வளர்ச்சிக்கு ஊக்குவிக்க உதவுகிறது. மேலும் தலைமுடி முன்கூட்டியே நரைப்பதை தடுக்கும். இதற்கு தினமும் ஒரு ஸ்பூன் எள் எண்ணெயை தலைமுடிக்கு தடவலாம் அல்லது நீங்கள் தேய்க்கும் எண்ணெயுடன் இதை கலந்து தேய்க்கலாம்.
கருஞ்சீரகம்
கருஞ்சீரகம் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து இயற்கையாகவே தலைமுடி வளர்ச்சியை தூண்டும். மேலும் இளநரை வருவதையும் தடுக்க உதவுகிறது. வாரத்திற்கு 1-2 முறை இதை ஹார்பேக்காக போட்டு வந்தால் நல்ல பலனை பெறுவீர்கள்.
கோதுமை புல்
உடல் எடையை குறைக்க தான் இதை பானமாக எடுத்துக் கொள்வோம். ஆனால் தலைமுடிக்கும் இது ஒரு சூப்பர் உணவு. இந்த பானம் பொடுகு உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்யவும், உச்சந்தலையே சுத்தப்படுத்தவும் உதவுகிறது. மேலும் உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியின் வளர்ச்சியை தூண்டும்.