- Home
- Lifestyle
- White Hair Problem: இளநரை பிரச்சனையா? நொடியில் மறைய இந்த டிப்ஸ் பயன்படுத்தி பாருங்கள், தீர்வு உறுதி
White Hair Problem: இளநரை பிரச்சனையா? நொடியில் மறைய இந்த டிப்ஸ் பயன்படுத்தி பாருங்கள், தீர்வு உறுதி
White Hair Problem: இன்றைய காலகட்டத்தில் இளம் வயதிலேயே வெள்ளை முடி வருவது பெரிய பிரச்சனையாகிவிட்டது. இவற்றை சமாளிக்க சில பயனுள்ள தகவல் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

White Hair Problem:
இன்றைய நவீன வாழ்கை முறையில், நரைமுடி என்பது ஒரு பிரச்சனையாக மாறிவிட்டது. அதிலும், குறிப்பாக, 30 வயதை கடந்த அனைத்து ஆண்களுக்கும் இதனால் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். வெள்ளை முடி வருவதற்கு முக்கிய காரணம், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான் அதேபோன்று, மன அழுத்தம், வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் முடி வெள்ளையாகிறது.
White Hair Problem:
சில இளைஞர்கள் ரசாயனம் நிறைந்த ஹேர் டை அல்லது விலையுயர்ந்த ஹேர் கலர்களை பயன்படுத்துகிறார்கள். எனினும் இவற்றால் முடி சேதம் மற்றும் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளது. இளநரையை இயற்கையான எளிய முறையில் கருமையாக்கக்கூடிய ஒரு சிறப்பான தீர்வு பற்றி இந்த பதிவில் காணலாம்.
நெல்லிக்காய் மற்றும் வெந்தய விதைகள், பிளாக் டீ, பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு, மருதாணி மற்றும் காபி, கறிவேப்பிலை மற்றும் எண்ணெய் போன்ற பொருட்கள் வெள்ளை முடியை கருப்பாக மாற்றும் தன்மை கொண்டவையாகும்.
White Hair Problem:
புளி இலைகளால் கிடைக்கும் நன்மைகள்:
புளியில் உள்ள இயற்கையான ஹேர் கலரிங் ஏஜென்ட்கள் காரணமாக, சில வாரங்கள் பயன்படுத்தினால், வெள்ளை முடி மீண்டும் கருப்பாக மாறுவது மட்டுமல்லாமல், முடி உதிர்தல், முடி வறட்சி, பலவீனமான முடி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
White Hair Problem:
புளி இலைகளின் பயன்பாடு:
நல்ல கூந்தல் ஆரோக்கியத்திற்கு, புளி இலைகளின் ஹேர் பேக் தயார் செய்யலாம்.
1. முதலில், ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் எடுத்து, அதில் அரை கப் புளியை சேர்த்து கலக்கவும். இப்போது அதை கொதிக்க வைத்து, அது குளிர்ந்து போகும் வரை காத்திருந்து, முடியில் தெளித்த பிறகு சிறிது நேரம் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவவும்.