- Home
- Cinema
- தொலைக்காட்சி
- டூயட் ரவுண்டில் ஆட மறுத்த ராஜீ – அக்ரீமெண்ட் வச்சு பிளாக்மெயில் பண்ணும் நடுவர்கள்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
டூயட் ரவுண்டில் ஆட மறுத்த ராஜீ – அக்ரீமெண்ட் வச்சு பிளாக்மெயில் பண்ணும் நடுவர்கள்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
Raji Ready to Leave From Dance Competition : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 570ஆவது எபிசோடில் ராஜீ டூயட் ரவுண்டில் ஆட மறுத்த நிலையில் அங்கிருந்து புறப்பட்டு செல்ல முயற்சித்தார்.

Raji Ready to Leave From Dance Competition : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 570ஆவது எபிசோடில் தொட்டு தொட்டு ஆடுவது என்னால் முடியாது என்று ராஜீ மறுப்பு தெரிவித்தார். இதனால், ஆத்திரமடைந்த நடுவர்கள் நாங்கள் சொல்வது போன்று தான் நீ ஆட வேண்டும் என்று ராஜீயை கட்டாயப்படுத்தவே அவர் என்னால் முடியாது என்று கூறி அங்கிருந்து புறப்பட தயாரானார். ஆனால், நடுவர்கள் அவர் அக்ரீமெண்டில் கையெழுத்து போட்டதை வைத்து பிளாக்மெயில் செய்தனர்.
டான்ஸ் போட்டி முடியும் வரை இந்த போட்டியிலிருந்து பின் வாங்க கூடாது. கடைசி வரை போட்டியில் பங்கேற்க வேண்டும். அதையும் மீறி புறப்பட்டுச் சென்றால் ரூ.10,00000 லட்சம் கொடுக்க வேண்டும் என்று பிளாக்மெயில் செய்தனர். நான் டான்ஸ் ஷோ என்று நினைத்து தான் இங்கு வந்தேன். ஆனால், இங்கு நடப்பதையெல்லாம் பார்த்தால் டான்ஸ் ஷோ போன்று தெரியவில்லை என்றார்.
நடுவர்கள் கூறியதை எல்லாம் கேட்டு ராஜீ அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு அவருடன் போட்டிக்கு வந்த மற்றொரு போட்டியாளர் ராஜீயிடம் வந்து பொறுமையாக இருந்து கடைசி வரை ஆடு அப்போதுதான் இங்கிருந்து செல்ல முடியும். சைன் போட்ட அக்ரீமெண்டை படித்து பார்த்து தான் கையெழுத்து போட்டயா என்று கேட்டார். மேலும், இப்படியெல்லாம் ஆட முடியாது என்று சொன்னால் அப்புறம் எப்படி சினிமா வாய்ப்பு கிடைக்கும். இவங்க ரொம்ப மோசமானவங்க, இங்கிருந்து உன்னால் வெளியில் போக முடியாது. டூயட் ரவுண்ட் தான, தொட்டு தொட்டு ஆடு, இல்லை என்றால் உன்னை சும்மா விடமாட்டங்க என்று சொல்லிவிட்டு சென்றார்.
ஆனால் ராஜீக்கு கடைசி வரை இந்த போட்டியில் பங்கேற்க விருப்பமில்லை. இது ஒரு புறம் இருக்க தனது பேரனுக்காக காந்திமதி தனது மகள் கோமதியை தனியாக அழைத்து அவரிடம் அரசி கொடுத்த கேஸை வாபஸ் பெற வேண்டும் என்றார். மேலும், கோமதியை தனியாக கோயிலுக்கு அழைத்து பேசினார்.
இறுதியாக இனிமேல் நான் இங்கு இருக்க மாட்டேன். திறமைக்கு மதிப்பு, மரியாதை கிடைக்கும் என்று இங்கு வந்தேன். ஆனால், அப்படி எதுவும் கிடைக்கவில்லை. இனிமேல் யார் தடுத்தாலும் நான் இங்கு இருக்கமாட்டேன் என்று கூறிய ராஜீ தனது லக்கேஜ் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு குன்னக்குடிக்கு கிளம்பினார். ஆனால், நடுவர்களிடம் வசமாக சிக்கிக் கொண்டார். சரி, நீ போக வேண்டுமென்றால் ரூ.10 லட்சம் பணத்தை கட்டி விட்டு இங்கிருந்து போ என்று கூறுவதோடு இன்றைய எபிசோடு முடிவடைந்தது. இனி நாளை என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.