உங்கள் சமையல் சுவையை அதிகரிக்க உதவும் சில சிம்பிள் குக்கிங் டிப்ஸ்கள் இங்கே.
சமையல் என்பது ஒரு கலை என்று கூறுவார்கள். எனவே நீங்கள் சமைக்கும் உணவை எல்லோருக்கும் பிடித்த மாதிரி சுவையாக மாற்ற உதவும் சில எளிய சமையல் டிப்ஸ்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
1. பாகற்காயில் பொரியல் செய்யும் போது அதில் கசப்பு தெரியாமல் இருக்க அதை சிறிது நேரம் தயிரில் ஊற வைத்து பிறகு சமைத்தால் கசப்பு தன்மை முற்றிலும் குறைந்து விடும்.
2. கூட்டு பொரியல் சமைக்கும்போது அதில் வறுத்த வேர்க்கடலை பொடியை சேர்த்துக்கொண்டால் வித்தியாசமான சுவையை கொடுக்கும். மணமாகவும் இருக்கும்.
3. பாயாசம் தண்ணி போல இருந்தால் ஒரு வாழைப்பழத்தை நன்கு மசித்து அதனுடன் தேன் கலந்து கொதிக்கும் பாயாசத்தில் சேர்த்து நன்றாக கிளறவும். அவ்வளவுதான் பாயாசம் கெட்டியாக மாறிவிடும். சுவையும் அருமையாக இருக்கும்.
4. பஜ்ஜி மாவு கரைத்த உடனே சீவிய வாழைக்காயை அதில் போட்டு பொரித்தால் எண்ணெய் குடிக்காது. பஜ்ஜி உப்பியும், மொரு மொவென்று வரும். சுவையும் அருமையாக இருக்கும்.
5. கேசரி உதிரியாகவும், அதன் சுவையை அதிகரிக்கவும் இறுதியில் சிறிதளவு வறுத்த கடலை மாவை அதில் போட்டு கிளறவும்.
6. தக்காளி சட்னி ருசியாக வர அதனுடன் சிறிதளவு வறுத்த எள்ளை சேர்த்து அரைக்கவும். கூடுதல் சுவையையும் கொடுக்கும்.
7. குழம்பு செய்யும்போது காய்கறிகள் மற்றும் வெங்காயத்தை முதலில் வதக்கவும். பிறகு தக்காளியை சேர்த்து வதக்கி குழம்பு தயாரித்தால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
8. பூரி புசுபுசுன்னு வர மாவு பிசையும் போது சூடான நீர் மற்றும் சிறிதளவு நெய் சேர்த்து பிசையவும். இப்படி மாவு பிசைந்தால் பூரி உப்பு போய் வரும். மென்மையாகவும் சாப்பிடுவதற்கு ருசியாகவும் இருக்கும்.
9. இட்லி தோசைக்கு உளுந்து மாவு அரைக்கும் போது அதில் ஜில்வாட்டர் ஊற்றி அரைத்தால் மாவு பஞ்சு போல மிருதுவாக இருக்கும். நிறையவும் கிடைக்கும்.
10. தேங்காய் சிறிது நேரம் சூடான நீரில் வைத்துவிட்டு பிறகு பிழிந்தால் தேங்காய் பால் அதிகமாக கிடைக்கும். மீண்டும் பால் எடுக்க வேண்டிய அவசியம். இருக்காது உங்களது நேரமும் மிச்சம் ஆகும்.
