Karthigai Deepam 2 Serial Today Episode : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் மாயா கார்த்திக் பற்றிய உண்மையை சாமுண்டீஸ்வரியிடம் சொல்ல அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம் 2. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு கார்த்திகை தீபம் 2 சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் எபிசோடில் கான்ஸ்டபிள் கொலை செய்யப்பட்டதில் பரமேஸ்வரி மீது சந்தேகம் இருப்பதாக கூறி போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதன் காரணமாக கார்த்திக் யார் அந்த கொலையை செய்தது என்று கண்டுபிடிக்க தொடங்கினர். முதலில் கல்யாண மண்டபத்தின் சிசிடிவி கேமராவை சோதனை செய்தனர். அதில் மாயா கையில் துப்பாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை வைத்து அவர் தான் கான்ஸ்டபிளை கொலை செய்தார் என்று சொல்லிவிட முடியாது. மாறாக அவராகவே தனது குற்றத்தை ஒத்துக் கொள்ள வேண்டும். அதற்கு மாயாவை வலையில் விழ வைக்க வேண்டும் என்று கருதிய கார்த்திக் பிளான் போட்டு அதனை சரியாகவும் செய்து முடித்து மாயாவை ஒத்துக் கொள்ள வைத்தார்.

அதோடு கடந்த வாரம் எபிசோடு முடிந்தது. இதைத் தொடர்ந்து, இந்த வாரத்திற்கான எபிசோடு தொடங்கியது. இதில் மாயாவை கையோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று போலீசிடம் ஒப்படைத்துவிட்டு பரமேஸ்வரியை நிரபராதி என்று கார்த்திக் வெளியில் அழைத்து வந்தார். அதன் பிறகு சாமுண்டிஸ்வரிக்கு தனது மகள் ரேவதியை கொலை செய்ய திட்டமிட்டது மாயா என்றும், அதில் கான்ஸ்டபிள் மாட்டிக் கொண்டார் என்றும் தெரிய வர, அவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று மாயாவை எச்சரித்தார். அப்போது, அவர் கார்த்திக் தான் பரமேஸ்வரியின் பேரன் என்று சொல்கிறார். இதை நம்பாத சாமுண்டீஸ்வரி அங்கிருந்து புறப்பட்டு வருகிறார். இதற்கிடையில் காளியம்மாள் சிறையிலிருந்து வெளியில் வருகிறார்.

இது ஒரு புறம் இருக்க மறுபுறம் கான்ஸ்டபிள் இறப்பதற்கு முன்னதாக செல்போன் பற்றி சொன்னதாக அவர் கூறவே, அதைப் பற்றி கார்த்திக் விசாரிக்கிறார்.