Shakthi Thirumagan Trailer Released : விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் சக்தி திருமகன் படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய் ஆண்டனியின் 25ஆவது படமாக உருவாகி வரும் படம் தான் சக்தி திருமகன். இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, கண்ணன் அருணாச்சலம், வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், வினோத் ஆனந்த், கேசவ் என்று ஏராளமான பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். வரும் 19ஆம் தேதி திரைக்கு வரும் இந்தப் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க மிகப் பெரிய ஊழில் கொண்ட கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை படத்தின் டிரைலரை பார்க்கும் போதே தெரிகிறது.
நடிகர் விஜய் ஆண்டனி தொடர்ந்து வித்யாசமான கதைகளத்தில் எடுக்கப்படும் திரைப்படங்களில் ஆர்வமாக நடித்த வருகிறார். அந்த வகையில் தற்போது விறுவிறுப்பான திரில்லர் ஜானரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை விஜய் விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனமே தயாரித்துள்ளது.
ஏற்கனவே செப் 5 ஆம் தேதி திரைக்கு வரும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள மாறுதோ மற்றும ஜில் ஜில் ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

