இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:57 PM (IST) Aug 01
இந்த ரக்ஷா பந்தனுக்கு உங்கள் சகோதரிக்கு ரூ.700-க்குள் அசத்தல் டெக் பரிசுகளை அளியுங்கள்! இயர்பட்ஸ், பவர் பேங்க், ஸ்பீக்கர்கள் மற்றும் பலவற்றை ஃபிளிப்கார்ட், அமேசான் விற்பனையில் கண்டறியுங்கள்.
11:43 PM (IST) Aug 01
CLAT 2026 விண்ணப்பங்கள் UG/PG சட்டப் படிப்புகளுக்குத் திறக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 7 தேர்வுக்கு அக்டோபர் 31, 2025க்குள் விண்ணப்பிக்கவும். தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்களைப் பெறுங்கள்.
11:29 PM (IST) Aug 01
முழுநேர வேலை பார்த்துக்கொண்டே CAT தேர்வுக்குத் தயாராவது என்பது ஒரு சவாலான பணி. ஒரு நல்ல திட்டமிடல் மற்றும் நேர மேலாண்மை மூலம் இதை எளிதாக்கலாம்.
11:25 PM (IST) Aug 01
Karthigai Deepam 2 : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரியை சிக்க வைக்க சிவனாண்டி பிளான் பண்ணிய நிலையில் கார்த்திக் தனது மாமியாரை காப்பாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
11:23 PM (IST) Aug 01
நீட் முதுகலை தேர்வுக்குப் பிறகு அதிகம் விரும்பப்படும் 7 மருத்துவப் பிரிவுகளான ரேடியாலஜி, டெர்மட்டாலஜி, பொது மருத்துவம் போன்றவற்றை ஆராயுங்கள். உங்கள் கனவுப் பணிக்கு ஏற்ற பிரிவைத் தேர்வு செய்யுங்கள்.
11:17 PM (IST) Aug 01
அரசுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்லின் பயனர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த நிதியாண்டில் 8.55 கோடியாக இருந்த பயனர் எண்ணிக்கை தற்போது 9.1 கோடியாக உயர்ந்துள்ளது.
11:11 PM (IST) Aug 01
அமேசான் கிரேட் ஃப்ரீடம் திருவிழா 2025-ல் ஐபோன் 15-க்கு மிகப்பெரிய தள்ளுபடி! ரூ.11,000 வரை கூடுதல் சலுகைகளுடன் பெறுங்கள். விரைந்து செயல்படுங்கள்!
11:08 PM (IST) Aug 01
இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 247 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா பவுலிங்கில் கலக்கினார்கள்.
10:56 PM (IST) Aug 01
அமேசானில் iPhone 16e, Nothing Phone (3a) Pro, iQOO Neo 10R, Samsung Galaxy S24 Ultra மற்றும் OnePlus 13 போன்ற ஸ்மார்ட்போன்களில் அசத்தலான தள்ளுபடிகள். பட்ஜெட் விலையில் இருந்து பிரீமியம் மாடல்கள் வரை அனைவருக்கும் ஏற்ற டீல்கள் உள்ளன.
10:49 PM (IST) Aug 01
Shah Rukh Khan First National Awards for Jawan Movie : 35 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக ஷாருக்கான தேசிய விருது வென்றுள்ளார்.
10:48 PM (IST) Aug 01
10:15 PM (IST) Aug 01
துலீப் டிராபிக்கான மேற்கு மண்டல அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷர்துல் தாக்கூர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். புஜாரா, ரஹானே துலீப் டிராபியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
09:56 PM (IST) Aug 01
சமஸ்கிருதம் இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் தாய் என்றும், ஒவ்வொரு வீட்டிலும் பேசப்பட வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தினார். சமஸ்கிருதத்தைப் புரிந்துகொள்வதற்கும் சரளமாகப் பேசுவதற்கும் வித்தியாசம் உள்ளது என்றும் அவர் கூறினார்.
09:46 PM (IST) Aug 01
National Film Awards Winners List: 2023 ஆம் ஆண்டுக்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் விருது வென்றவர்களின் பட்டியலை பார்க்கலாம்.
08:55 PM (IST) Aug 01
08:26 PM (IST) Aug 01
GV Prakash Wins National Awards 2025 For Vaathi Movie : வாத்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
08:00 PM (IST) Aug 01
பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலன் விசாரித்துள்ளார்.
07:44 PM (IST) Aug 01
2019 உலகக் கோப்பை அரையிறுதியில் தோற்றதால் விராட் கோலி பாத்ரூமில் கதறி அழுதார் என்று யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார்.
07:27 PM (IST) Aug 01
விவாகரத்து மனுவில் கணவரை 'ஆண்மையற்றவர்' எனக் குறிப்பிடுவது அவதூறு இல்லை என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மனைவியின் நலனைப் பாதுகாக்க இத்தகைய குற்றச்சாட்டுகள் நியாயமானவை எனவும், சட்ட ஆவணங்களில் இடம்பெற்றால் அவதூறாகாது எனவும் கூறியுள்ளது.
07:19 PM (IST) Aug 01
Parking National Awards : ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பார்க்கிங் படம் சிறந்த படம் உள்படத்திற்கான தேசிய விருது உள்பட 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
06:45 PM (IST) Aug 01
சென்னையில் பறக்கும் ரயில், மெட்ரோ ரயில் இணைப்பு திட்டத்துக்கு ரயில்வே வாரியம் கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கியுள்ளது.
06:03 PM (IST) Aug 01
குழந்தைகளுக்கு முருங்கை இலை கொடுப்பதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
05:45 PM (IST) Aug 01
இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி விசித்திரமான சாதனை படைத்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
05:44 PM (IST) Aug 01
05:43 PM (IST) Aug 01
தர்மஸ்தலா கோவில் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) நடத்திய தோண்டலில் இந்த எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
05:24 PM (IST) Aug 01
சில முளைத்த காய்கறிகளை சாப்பிடுவது ஆபத்தானது. அவை இயற்கையாகவே நச்சுத்தன்மை உள்ள சேர்மங்களை கொண்டிருப்பதால், அவற்றை சாப்பிடுவதை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:12 PM (IST) Aug 01
Raji Opens About Her Love Relationships :பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 498ஆவது எபிசோடில் ராஜீ தனது திருமணத்திற்கு முன் இருந்த காதல் வாழ்க்கை குறித்த கசப்பான சம்பங்களை அனைவரது முன்னிலையிலும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
04:26 PM (IST) Aug 01
இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் காயமடைந்தபோது கருண் நாயர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
04:10 PM (IST) Aug 01
பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஓபிஎஸ் அதிருப்தியடைந்ததாக கூறப்படுகிறது.
04:08 PM (IST) Aug 01
இந்தப் பதிவில் லைம் நோய் குறித்து காணலாம்.
04:04 PM (IST) Aug 01
இஸ்ரோ மற்றும் நாசாவின் கூட்டு முயற்சியான நிசார் செயற்கைக்கோள், ஜி.எஸ்.எல்.வி.-16 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள், பூமியின் மேற்பரப்பைத் துல்லியமாக ஸ்கேன் செய்து, மாற்றங்களைக் கண்டறியும்.
03:51 PM (IST) Aug 01
இறந்தவர்களின் உடைகளை என்ன செய்வது என்பது பலரின் மனதில் எழும்பும் ஒரு கேள்வி. இது உணர்வுபூர்வமான விஷயம் மட்டுமல்லாமல் ஆன்மீக நம்பிக்கைகளையும் கொண்டுள்ளது. இறந்தவர்களின் பொருட்களை கையாளுவது குறித்து சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.
03:49 PM (IST) Aug 01
கருமையான தொடைகளை போக்க உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
03:47 PM (IST) Aug 01
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் யாருக்கும் தெரியாமல் பார்கவியுடன் வெளியூருக்கு எஸ்கேப் ஆன ஜீவானந்தத்தை ஒருவழியாக கண்டுபிடித்துள்ளார் ஜனனி.
03:43 PM (IST) Aug 01
இந்திய அரசு புதிய வேலைவாய்ப்புத் திட்டமான பிரதான் மந்திரி விகாசித் பாரத் ரோஜ்கர் யோஜனா (PM-VBRY) -ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் இளைஞர்களுக்கு நிதி ஊக்கத்தொகை மற்றும் நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்குகிறது.
03:23 PM (IST) Aug 01
சொகுசு வாழ்க்கை வாழும் 5 ராசிகள் ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் இந்த பூமியில் மட்டுமல்ல, மரணத்திற்குப் பிறகும் கூட சொர்க்கத்திலும் அரச சுகங்களை அனுபவிப்பார்கள்.
03:15 PM (IST) Aug 01
அமெரிக்காவின் புதிய சுங்க வரிகளால் அந்நாட்டு குடும்பங்களின் செலவு அதிகரிக்கும் என எஸ்பிஐ ஆய்வு கூறுகிறது. குறைந்த வருமான குடும்பங்கள் அதிகம் பாதிக்கப்படுவர், இந்தியாவுக்குக் குறைந்த பாதிப்பு எனவும் ஆய்வு தெரிவிக்கிறது.
03:13 PM (IST) Aug 01
03:01 PM (IST) Aug 01
இங்கிலாந்து தொடரில் 3 போட்டிகள் மட்டுமே விளையாடுவேன் என ஜஸ்பிரித் பும்ரா சொன்னதாக இந்திய அணியின் துணை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
02:53 PM (IST) Aug 01
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த சில தினங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.