- Home
- Cinema
- 35 ஆண்டுகால சினிமா வாழ்க்கை – ஷாருக்கானுக்கு முதல் முறையாக தேசிய விருது வாங்கி கொடுத்த அட்லீ!
35 ஆண்டுகால சினிமா வாழ்க்கை – ஷாருக்கானுக்கு முதல் முறையாக தேசிய விருது வாங்கி கொடுத்த அட்லீ!
Shah Rukh Khan First National Awards for Jawan Movie : 35 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக ஷாருக்கான தேசிய விருது வென்றுள்ளார்.

ஜவான் படத்திற்காக தேசிய விருது வென்ற ஷாருக்கான்
Shah Rukh Khan First National Awards for Jawan Movie : பாலிவுட் சினிமாவில் முன்னணிநடிகர்களில் ஒருவரான ஷாருக்கான தனது 35 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எத்தனையோ படங்களில் அவர் நடித்துள்ளார். அதில் எந்தப் படமும் அவருக்கு தேசிய விருது பெற்றுக் கொடுக்கவில்லை. இந்த நிலையில் தான் விஜய்யின் மாஸ் இயக்குநரான அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஜவான் படத்தில் நடித்தார்.
ஷாருக்கான் தேசிய விருது
இந்தப் படத்தில் ஷாருக்கான் அப்பா மகன் என்று இரட்டை கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். அதோடு தீபிகா படுகோனே, நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, சஞ்சய் தத் என்று பலரும் நடித்திருந்தனர். கடந்த 2023 ஆம் ஆண்டு திரைக்கு வந்ஹ இந்தப் படம் இந்திய சினிமாவில் புதிய சாதனையும் பெற்றது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் கொடுத்த வரவேற்பில் பிரமித்த போன ஷாருக்கான், பல வருடங்கள் ஒரு படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. தென்னிந்திய மக்களும் மும்பையில் குடியேறி இந்தப் படத்தில் பணியாற்றினர். இந்தப் படத்திற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்தோம் என்றார்.
ஷாருக்கானுக்கு தேசிய விருது
இந்த நிலையில் தான் ஜவான் படத்திற்காக சிறந்த நடிகருக்காக ஷாருக்கான் தேசிய விருது வென்றுள்ளார். ஷாருக்கான் சினிமாவிற்கு வந்து 35 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு முறை கூட அவர் தேசிய விருது வென்றதில்லை. இந்த நிலையில் தான் அட்லியின் ஜவான் படம் அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்று கொடுத்துள்ளது.
ஜவான் படத்தை போன்று 12 ஃபெயில் (12th Fail) படத்தில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய விக்ராத் மேஸ்ஸிக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.