- Home
- டெக்னாலஜி
- கெத்து காடும் பி.எஸ்.என்.எல் ! அடேங்கப்பா ஒரு வருஷத்துல இவ்வளவு பெரிய வளர்ச்சியா? கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்!
கெத்து காடும் பி.எஸ்.என்.எல் ! அடேங்கப்பா ஒரு வருஷத்துல இவ்வளவு பெரிய வளர்ச்சியா? கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்!
அரசுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்லின் பயனர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த நிதியாண்டில் 8.55 கோடியாக இருந்த பயனர் எண்ணிக்கை தற்போது 9.1 கோடியாக உயர்ந்துள்ளது.

பிஎஸ்என்எல்லின் பயனர் எண்ணிக்கை
அரசுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்லின் பயனர் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் 8.55 கோடியில் இருந்து 9.1 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில்
கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய அரசு பிஎஸ்என்எல்லுக்கு வழங்கிய ரூ.3.22 லட்சம் கோடி மறுமலர்ச்சி நிதி உதவியதாக தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
4ஜி விரிவாக்கம்
உள்நாட்டுத் தொழில்நுட்பம் சார்ந்த 4ஜி விரிவாக்கம் பிஎஸ்என்எல்லுக்கு உதவியாக இருந்தது. டிசிஎஸ் மற்றும் தேஜஸ் நெட்வொர்க்குடன் இணைந்து சி-டாட் இந்த அமைப்பை உருவாக்கியது.
4ஜி டவர்களில் 45,000 டவர்கள்
95,000 4ஜி டவர்களில் 45,000 டவர்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளதாக ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். பிஎஸ்என்எல் 4ஜி விரிவாக்கம் நிறைவடைய உள்ளது.
5ஜி டவர்கள் அமைக்கும் பணி
4ஜி நெட்வொர்க் பணி முடிந்தவுடன் 5ஜி டவர்கள் அமைக்கும் பணியைத் தொடங்குவதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. 5ஜி இல்லாமல் இனி முன்னேற முடியாது.
சொந்த வணிகத் திட்டம்
வளர்ச்சியை உறுதி செய்ய, பிஎஸ்என்எல்லின் 32 தொலைத்தொடர்பு வட்டாரங்களும் தற்போது ஒரு பரவலாக்கப்பட்ட அமைப்பின் கீழ் தங்கள் சொந்த வணிகத் திட்டத்தை உருவாக்கி வருகின்றன.