- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Dark Inner Thighs : தொடை இடுக்கில் கருப்பா இருக்கா? சில நிமிடங்களில் நீங்க சூப்பர் டிப்ஸ்!!
Dark Inner Thighs : தொடை இடுக்கில் கருப்பா இருக்கா? சில நிமிடங்களில் நீங்க சூப்பர் டிப்ஸ்!!
கருமையான தொடைகளை போக்க உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

Home Remedies for Dark Inner Thighs
பலருக்கும் தொடை இடுக்குகளில் கருமையாக இருக்கும். இது உடல் பருமன், அதிகப்படியான வியர்வை, தொடைகளின் உராய்வு, இறுக்குமான ஆடைகள் அணிதல், ஹார்மோன் பாதிப்பு, சரியான பராமரிப்பு இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படலாம். இதற்கு நீங்கள் சரியான நேரத்தில் பராமரிப்பு எடுக்காவிட்டால் கருமை மேலும் மோசமடைய கூடும். தொடை கருமையை போக்க சிலர் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே தொடை கருமையை சுலபமாக நீக்கி விடலாம். அது என்ன என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
கற்றாழை ஜெல் :
கற்றாழை ஜெல் இயற்கையாகவே குளிர்ச்சி தன்மையுடையது. மேலும் இதில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை சருமத்தின் எரிச்சல் மற்றும் அரிப்பை போக்க உதவும். தொடையில் இருக்க கருமையை போக்க கற்றாழை ஜெல் பயன்படுத்தலாம். இதற்கு புதிய கற்றாழை ஜெல்லை லேசாக தொடையில் தடவி சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் கழித்து சூடான நீரில் கழுவுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் விரைவில் கருமை மறைந்துவிடும்.
உருளைக்கிழங்கு
கண்கள் கீழ் இருக்கும் கருவளையத்தை போக்க உருளைக்கிழங்கு பயன்படுத்துவோம். அதுபோல தான் தொடையில் இருக்கும் கருமையை போக்கவும் உருளைக்கிழங்கு பயன்படுத்தலாம். இது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க உதவுகிறது. இதற்கு உருளைக்கிழங்கு இரண்டாக வீட்டில் அதை வட்ட வடிவில் கருமையான தொடை பகுதியில் நன்கு தடவ வேண்டும். 15 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு, பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்தால் தொடையில் இருக்கும் கருமை நீங்கிவிடும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சதுமத்தை நிறத்தை மீட்டெடுக்க உதவும். இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் இது சேதமடைந்த சருமத்தை சரி செய்ய முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் எலுமிச்சையை சருமத்திற்கு தனியாக பயன்படுத்தக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது தொடைக்கருமையை போக்க சம அளவு எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளுங்கள். அதை தொடையில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். எலுமிச்சையில் இருக்கும் ப்ளீச்சிங் பண்புகள் மற்றும் வைட்டமின் சி தொடையின் கருமையை போக்கும்.
முக்கிய குறிப்புகள்:
- தொடை பகுதியை எப்போதும் சுத்தமாகவும், உலர்த்தி வைப்பது மிகவும் அவசியம். தினமும் குளிக்கும் போது அந்த இடத்தை நன்கு தேய்க்க வேண்டும் மற்றும் அந்த இடத்தை நன்கு துடைத்து உலர வைக்க வேண்டும்.
- ஈரமான ஆடைகளை அணியக்கூடாது பருத்தி ஆடைகள் அணிவது நல்லது.
- உடற்பயிற்சி செய்த பிறகு தொடை பகுதியை நன்கு துடைத்து உலர வைக்க வேண்டும்.
- தொடை இடுக்குகளில் உராய்வை தவிர்க்க இறுக்கமான ஆடைகள் அணிய வேண்டாம்.
- தொடை கருமையாகாமல் இருக்க லோஷன்கள் பயன்படுத்தலாம்.
- தொடையில் அரிப்பு அதிகமாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது தான் நல்லது.