சிங்கம் போல் சிங்கிளாக மூன்று தேசிய விருதுகளை தட்டி தூக்கிய பார்க்கிங்
Parking National Awards : ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பார்க்கிங் படம் சிறந்த படம் உள்படத்திற்கான தேசிய விருது உள்பட 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்க்கிங் படத்திற்கு தேசிய விருது அறிவிப்பு
Parking National Awards : ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படம், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை, நடிகர், நடிகைகளுக்கான தேசிய விருதானது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு, 2023 ஆம் ஆண்டுக்கான (71வது) தேசிய திரைப்பட விருதுகளை தற்போது அறிவித்துள்ளது. இதில் தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் மொத்தம் 4 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 3 விருதுகள் ஒரே படத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராம்குமார் பாலகிருஷ்ணன், பார்க்கிங் சிறந்த படம்
அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், எம் எஸ் பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோர் உள்பட பிரபலங்கள் பலர் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் பார்க்கிங். முழுக்க முழுக்க த்ரில்லர் டிராமாக கதிஅயை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருந்தார். பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்சர்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும் வணிக ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது
பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள்
தமிழில் வெளியான இந்தப் படம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் இந்தப் படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான 71ஆவது தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டது. இதில் பார்க்கிங் படம் மட்டுமே தமிழ் சினிமாவிற்கு 3 விருதுகளை வென்று கொடுத்துள்ளது.
அதன்படி.
சிறந்த திரைப்படம் – பார்க்கிங்
சிறந்த திரைக்கதை - ராம்குமார் பாலகிருஷ்ணன்
சிறந்த துணை நடிகர் – எம் எஸ் பாஸ்கர்
என்று பார்க்கிங் படம் மட்டுமே 3 விருதுகளை வென்றுள்ளது.
இதே போன்று தனுஷ் நடிப்பில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்திற்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது அவருக்கு 2ஆவது தேசிய விருது. இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் வெளியாகியிருந்தாலும், தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.