MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வென்ற ஒன் மேன் ஆர்மி ஜிவி பிரகாஷ்!

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வென்ற ஒன் மேன் ஆர்மி ஜிவி பிரகாஷ்!

GV Prakash Wins National Awards 2025 For Vaathi Movie : வாத்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Aug 01 2025, 08:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
71ஆவது தேசிய திரைப்பட விருது
Image Credit : our own

71ஆவது தேசிய திரைப்பட விருது

கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான 71ஆவது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்தது. ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் சினிமா துறையில் சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், துணை நடிகர், நடிகைகள், பின்னணி பாடகர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் மற்றும் சம்யுக்தா இருவரும் முக்கிய ரோலில் நடித்து வெளியான படம் தான் வாத்தி. முழுக்க முழுக்க தெலுங்கு சினிமாவில் வெளியான இந்தப் படம் தமிழில் வாத்தி என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
வாத்தி, ஜிவி பிரகாஷ் குமார்
Image Credit : Twitter

வாத்தி, ஜிவி பிரகாஷ் குமார்

இவரது இசையில், வா வாத்தி, பார்வைகலே, நாடோடி மன்னன், கலங்குதே சூரியா ஆகிய பாடல்கள் இடம் பெற்றிருந்தன. இதில் காதலிக்க கைடு இல்ல சொல்லித்தர வா வாத்தி என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஃபேமஸ் ஆனது. ரூ.65 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.105 கோடி வரையில் வசூல் குவித்தது.

விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் தான் இந்த படத்தின் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் குமாருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஜிவி பிரகாஷ் 2ஆவது தேசிய விருது வென்றுள்ளார். இதே போன்று ஹரிஷ் கல்யாண் நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கபட்டுள்ளன.

34
ஜிவி பிரகாஷூக்கு தேசிய விருது
Image Credit : Google

ஜிவி பிரகாஷூக்கு தேசிய விருது

அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், எம் எஸ் பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோர் உள்பட பிரபலங்கள் பலர் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் பார்க்கிங். முழுக்க முழுக்க த்ரில்லர் டிராமாக கதிஅயை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருந்தார். பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்சர்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும் வணிக ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது

44
தனுஷ், வாத்தி, ஜிவி பிரகாஷ்
Image Credit : Google

தனுஷ், வாத்தி, ஜிவி பிரகாஷ்

தமிழில் வெளியான இந்தப் படம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் இந்தப் படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான 71ஆவது தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டது. இதில் பார்க்கிங் படம் மட்டுமே தமிழ் சினிமாவிற்கு 3 விருதுகளை வென்று கொடுத்துள்ளது.

அதன்படி.

சிறந்த திரைப்படம் – பார்க்கிங்

சிறந்த திரைக்கதை - ராம்குமார் பாலகிருஷ்ணன்

சிறந்த துணை நடிகர் – எம் எஸ் பாஸ்கர்

என்று பார்க்கிங் படம் மட்டுமே 3 விருதுகளை வென்றுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தனுஷ்
ஜி. வி. பிரகாஷ் குமார்
ஜி. வி. பிரகாஷ் குமார்
தமிழ் சினிமா
சினிமா
சினிமா காட்சியகம்
திரைப்பட விமர்சனம்
திரைப்படம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Recommended image2
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image3
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved