- Home
- Cinema
- Pandian Stores 2 : காதல் உறவு பற்றி வெளிப்படையாக பேசிய ராஜீ – கேஷூவலாக இருந்த கோமதி, மீனா – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
Pandian Stores 2 : காதல் உறவு பற்றி வெளிப்படையாக பேசிய ராஜீ – கேஷூவலாக இருந்த கோமதி, மீனா – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
Raji Opens About Her Love Relationships :பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 498ஆவது எபிசோடில் ராஜீ தனது திருமணத்திற்கு முன் இருந்த காதல் வாழ்க்கை குறித்த கசப்பான சம்பங்களை அனைவரது முன்னிலையிலும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
Raji Opens About Her Love Relationships : நாளுக்கு நாள் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கும் நிலையில் டிஆர்பி ரேட்டிங்கில் மட்டும் முன்னிலையில் இடம் பெறுவதில்லை. தொடர்ந்து சன் தொலைக்காட்சி சீரியல்கள் தான் டிஆர்பி ரேட்டிங்கிலும் நம்பர்ஸ் பெறுகிறார்கள். இந்த நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 548ஆவது எபிசோடில் ராஜீக்கான ஸ்பேஸ் ரொம்பவே கொடுக்கப்பட்ட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 548ஆவது எபிசோடு
பிஸினஸ் செய்ய தயாராகிக் கொண்டிருக்கும் கதிர் வங்கி லோனுக்கு முயற்சி செய்து வரும் நிலையில் பாண்டியனும் அதற்காக உதவி செய்ய் எண்ணினார். ஆனால், அவர் வேண்டாம் என்று வந்துவிட்டார். இதைத் தொடர்ந்து ராஜீ தனது கணவருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக நகைகள் அனைத்தும் விற்க முடிவு செய்தார். அதற்காக பைனான்ஸ் கம்பெனிக்கும் சென்றார்.
நகைகளை விற்க சென்ற இடத்தில் மாட்டிக்கொண்ட ராஜீ
அங்கு, சக்திவேல் பார்த்து அந்த நகைகளை பார்க்கையில் அது தங்களது நகைகள் என்று தெரிந்து வீட்டிற்கு கொண்டு வந்து வீட்டிலுள்ளவர்களிடம் காண்பித்துள்ளார். இதையடுத்து கதிர் நகைகள் அனைத்தும் திருடபட்டுவிட்டதாக கூறவே, அதைப் பற்றி இத்தனை நாட்கள் எதுவும் பேசாமல் இருந்த நிலையில் இப்போது அதைப் பற்றி பேச்சு வந்துள்ளது.
நகைகளை வீட்டில் மறைத்து வைத்து இத்தனை நாட்களாக நம்மிடம் நாடகம் ஆடியிருக்கிறார்கள் அப்படி இப்படி என்று பாண்டியனை அசிங்கப்படுத்தினார் சக்திவேல். இதனால், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ராஜீ, தனக்கு என்ன நடந்தது என்பது பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.
கண்ணனை காதலித்தேன் – அவன் என்னை ஏமாற்றிவிட்டான்
கதிரை திருமணம் செய்வதற்கு முன்னதாக தான் கண்ணன் என்பவரை காதலித்ததாகவும், அவர் தன்னை காதலிக்கவில்லை, தன்னிடம் உள்ள சொத்துக்களை தான் காதலித்தான் என்பதையும் தெளிவாக விளக்கினார். மேலும், தன்னை திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்று தன்னிடமிருந்த நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுவிட்டதாக கூறினார்.
அந்த தருணத்தில் தற்கொலை செய்ய எண்ணினேன். ஆனால் அப்போது கதிர் தான் என்னை காப்பாற்றினான். என்னதான் நாங்கள் இருவரும் எதிரிகளாக இருந்தாலும் எனக்கு ஒரு கஷ்டம் என்று வரும் போது கதிர் தான் என்னை திருமணம் செய்து கொண்டு என்னை தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியிலிருந்து காப்பாற்றினான். இதில் நான் சொன்ன எல்லாமே உண்மை தான், பாட்டி மீது அப்பா மீது அம்மா மீது நம் குல தெய்வத்தின் மீது சத்தியம் என்று அனைவர் மீது சத்தியம் செய்தார்.
பாண்டியனிடம் மன்னிப்பு கேட்ட ராஜி
கடைசியில் கூட்டம் கலையவே பாண்டியனிடமும் ராஜீ தெளிவாக எடுத்துக் கூற அவரோ அமைதியாக தனது ரூமிற்குள் சென்றார். இதில் செந்தில் மற்றும் சரவணன் இருவரும் ஒருவருக்கொருவர் உனக்கு தெரியுமா, எனக்கு தெரியுமா என்றெல்லாம் கேட்டுக் கொண்டனர். ராஜீ சொன்னதில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் உண்மை. ஆனால், அவருக்கு திருமணம் செய்து வைத்தது கோமதி தான். இந்த உண்மை எப்போது வெளிவரும் என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம்.