பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலன் விசாரித்துள்ளார்.

Ramadoss Inquired About CM Stalin's Health Over Phone: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கிட்டதட்ட 4 நாட்களுக்கும் மேலாக சில பரிசோதனைகளை செய்து வீடு திரும்பினார். இந்த நிலையில் தான் முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் கொண்டு ராமதாஸ் நலம் விசாரித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ஸ்டாலின்

''உங்களுடன் நாங்களும் உள்ளோம்'' என்று ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாஜகவில் கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை நேரடியாக சந்தித்து நலம் விசாரித்தனர். இப்போது ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே பெரும் நடந்து வரும் நிலையில், ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசியுள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாலினிடம் பேசியது குறித்து ராமதாஸ் விளக்கம்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ''தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தேன். அவர் நலமுடன் உள்ளார்'' என்றார். அப்போது ராமதாஸிடம் பாமக பொதுக்குழு கூட்டத்துக்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர், ''கட்சிக்கு உரியவர்கள் யார்? என்பதை தலைமை தீர்மானிக்கும்'' என்று தெரிவித்தார்.

நான் இருக்கும் இடமே பாமகவின் தலைமையகம்

மேலும் பாமகவின் தலைமையகம் மாற்றப்பட்டது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ராமதாஸ், ''ராமன் இருக்கும் இடம் சீதைக்கு அயோத்தி என்பது போல் நான் இருக்கும் இடமே பாமவுக்கு தலைமையகம்'' என்று கூறினார். ஏற்கெனவே ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கப் போவதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், இப்போது அவர் போன் மூலம் முதல்வரிடம் பேசியுள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் ராமதாஸ் திமுக கூட்டணியில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.