- Home
- Tamil Nadu News
- பிரேமலதா, ஓபிஎஸ்.ஐ தொடர்ந்து ஸ்டாலினை சந்திக்கும் ராமதாஸ்? மாற்றி அமைக்கப்படும் கூட்டணி கணக்கு?
பிரேமலதா, ஓபிஎஸ்.ஐ தொடர்ந்து ஸ்டாலினை சந்திக்கும் ராமதாஸ்? மாற்றி அமைக்கப்படும் கூட்டணி கணக்கு?
பிரேமலதா விஜயகாந்த், ஓ.பன்னீர்செல்வம் வரிசையில் பாமக நிறுவனர் ராமதாஸ்ம் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வரை சந்திக்கும் ராமதாஸ்?
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டு சுமார் 1 வார காலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் சில தினங்கள் வீட்டில் ஓய்வெடுத்தார். ஓய்வை முடித்துக் கொண்டு முதல்வர் நேற்று மீண்டும் பணிக்கு திரும்பினார். இதனைத் தொடர்ந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
ஸ்டாலினை அடுத்தடுத்து சந்திக்கும் அரசியல் தலைவர்கள்
முதல்வர் ஸ்டாலினை இருவேறு கட்சி தலைவர்களும் ஒரே நாளில் சந்தித்து பேசியது அரசியலில் முக்கியத்துவம் பெற்றது. மேலும் பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று தான் வெளியேறினார் என்ற நிலையில் நேற்றைய தினமே முதல்வரை சந்தித்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வரை சந்திக்கும் ராமதாஸ்?
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ்ம் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இருந்து நேற்று இரவு சென்னை புறப்பட்ட ராமதாஸ் சென்னை ஆழ்வார் பேட்டையில் அமைந்துள்ள தனது மகள் வீட்டில் தங்கியுள்ளார்.
தந்தை, மகன் இடையே மோதல்
ஏற்கனவே பாமக.வில் தந்தை, மகன் இடையே அதிகார மோதல் முத்தியுள்ள நிலையில் தனது பலத்தை அதிப்படுத்தும் நோக்கிலும், கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்தும் விதமாகவும் ராமதாஸ் முதல்வரை சந்திக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ராமதாஸ் நான் முதல்வரிடம் நேரம் கேட்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.