இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:03 PM (IST) Dec 08
'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்களவையில் நடந்த சிறப்பு விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். 2047-ல் இந்தியா வளர்ச்சியடைய இப்பாடல் ஊக்குவிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
10:52 PM (IST) Dec 08
NTA தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகள் மற்றும் 2024 தேர்வு குளறுபடிகள் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு வெளியிட்ட அறிக்கை.
10:49 PM (IST) Dec 08
Kendriya Vidyalaya கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10,000+ காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், மாணவர் சேர்க்கையும் சரிவை சந்தித்துள்ளது. முழு விவரம்.
10:45 PM (IST) Dec 08
RRB Paramedical ஆர்ஆர்பி பாராமெடிக்கல் வேலைவாய்ப்பு 2025:. ரயில்வே தேர்வு வாரியம் பாராமெடிக்கல் பணிகளுக்கான விண்ணப்ப நிலையை நாளை வெளியிடுகிறது. முழு விவரம் உள்ளே.
10:39 PM (IST) Dec 08
Right to Disconnect வேலை நேரம் முடிந்த பிறகு அலுவலக அழைப்புகளைத் தவிர்க்கும் ‘Right to Disconnect’ மசோதா மக்களவையில் அறிமுகம். இது ஊழியர்களின் மனநலத்தைப் பாதுகாக்கும்.
10:33 PM (IST) Dec 08
Google ஆன்லைன் பண மோசடிகளைத் தடுக்க கூகுள் புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தெரியாத நபருடன் பேசும்போது வங்கி செயலியைத் திறந்தால் எச்சரிக்கை விடுக்கும்.
10:23 PM (IST) Dec 08
Elon Musk எலான் மஸ்கின் Grok 4.20 AI இன்னும் சில வாரங்களில் வெளியாகிறது. இது பங்குச்சந்தை சோதனையில் GPT-5.1 மற்றும் Gemini 3 Pro-வை விட சிறந்தது எனத் தகவல்.
10:20 PM (IST) Dec 08
இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைக் கண்காணிக்க நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை சிறப்புப் பார்வையாளர்களாக நியமித்துள்ளது.
10:15 PM (IST) Dec 08
OpenAI ChatGPT-ல் விளம்பரங்கள் வருவதாக எழுந்த புகாருக்கு OpenAI மறுப்பு தெரிவித்துள்ளது. அது விளம்பரம் இல்லை, ஆப் பரிந்துரைகள் என விளக்கம் அளித்துள்ளது.
10:06 PM (IST) Dec 08
Starlink India இந்தியாவில் ஸ்டார்லிங்க் இண்டர்நெட் விலை வெளியானது. மாதம் ரூ.8,600 கட்டணம் மற்றும் அன்லிமிடெட் டேட்டா. முழு விபரங்கள் இதோ.
10:04 PM (IST) Dec 08
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து, முதல்வர் பதவிக்கு ரூ.500 கோடி தேவை எனப் பேசியதால் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தனது கருத்து திரித்துக் கூறப்பட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
10:02 PM (IST) Dec 08
புதுச்சேரியில் நாளை தவெக விஜய்யின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில், புதுவை காவல்துறையினர் எமர்ஜென்சி எக்ஸிட் அமைத்து சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
09:19 PM (IST) Dec 08
பீகாரை தொடர்ந்து தமிழ்நாட்டில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். இதற்கு ஸ்டாலின் ரெடியாக இருக்கும்படி குஜராத்தில் அமித்ஷா சபதம் எடுத்துள்ளார்.
09:08 PM (IST) Dec 08
08:48 PM (IST) Dec 08
உத்தரப் பிரதேசம் ஆக்ராவில், கார் ஓட்டும்போது ஹெல்மெட் அணியவில்லை என காவல்துறை அபராதம் விதித்ததால், குல்ஷன் என்ற ஆசிரியர் ஒருவர் தற்போது காரை ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்து செல்கிறார். இந்த வினோத சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
08:35 PM (IST) Dec 08
திருப்பத்தூரில் ரூ.10 கோடி ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும் நோட்டீஸ் வந்ததால் பிரியாணி மாஸ்டர் அதிர்ச்சியில் உறைந்தார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
07:52 PM (IST) Dec 08
IND vs SA T20: இந்தியா, தென்னாப்பிரிக்கா டி20 தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்த தொடரில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இரண்டு மெகா சாதனை படைக்க தயாராக உள்ளார்.
07:47 PM (IST) Dec 08
07:42 PM (IST) Dec 08
நீங்கள் அசைவ பிரியரா? சிக்கன், மட்டன் ஈரலை அடிக்கடி சாப்பிடுகிறீர்களா? பல சத்துக்கள் நிறைந்த இந்த ஈரல் சிலருக்கு விஷம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படி யாரெல்லாம் இதை சாப்பிட கூடாது என்று இந்த பதிவில் காணலாம்.
07:28 PM (IST) Dec 08
ரூ.1020 கோடி ஊழல் குற்றச்சாடு சுமத்தப்பட்ட நிலையில், அமலாக்கத்துறைக்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
06:56 PM (IST) Dec 08
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு விவாதம், மோடிக்கும் பிரியங்கா காந்திக்கும் இடையே அரசியல் மோதலாக வெடித்துள்ளது. முஸ்லிம் லீக்கிற்காக நேரு பாடலை மாற்றியதாக மோடி குற்றம் சாட்ட, பாஜக வரலாற்றைத் திரிப்பதாக பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
06:41 PM (IST) Dec 08
எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்களுக்கு 30 வயதிற்கு மேல் பணக்காரரராகும் யோகம் இருக்கிறதாம். அது எந்தெந்த தேதிகளில் என்று இங்கு பார்க்கலாம்.
06:37 PM (IST) Dec 08
பண மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீனில் சில தளர்வுகளை வழங்கியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
06:30 PM (IST) Dec 08
Pandian Stores 2 Serial Today 657th Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 657ஆவது எபிசோடில் இவ்வளவு பொய் சொல்லி தனது மகனை ஏமாற்றி வந்த தங்கமயிலை கோமதி லெப்ட் ரைட்டு வாங்கிவிட்டார்.
06:04 PM (IST) Dec 08
குளிர்காலத்தில் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை குறைக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் இந்த ஒரு டீய குடியுங்கள். அதை எப்படி தயாரிப்பது என்று இங்கு பார்க்கலாம்.
05:57 PM (IST) Dec 08
Kerala Actress Case : நடிகை தாக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் விய்யூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
05:42 PM (IST) Dec 08
Karthigai Deepam 2 Serial Today 1056 Episode Promo Video : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடிற்கான புரோமோ வீடியோ வெளியான நிலையில் அதில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
05:35 PM (IST) Dec 08
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி மெதுவாக பந்துவீசியதற்காக கேப்டன் கே.எல்.ராகுல், இந்திய வீரர்களுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
05:09 PM (IST) Dec 08
Meena Rasi Weekly Rasi Palan: டிசம்பர் 08 முதல் 14 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:57 PM (IST) Dec 08
Kumba Rasi Weekly Rasi Palan: டிசம்பர் 08 முதல் 14 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:48 PM (IST) Dec 08
தமிழகத்தில் இண்டியா கூட்டணில் இருக்கும் திமுக தலைமையிலான தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் பங்கு கேட்டும், அதிக சீட்டுகள் கேட்டும் இல்லையெனில் தவெக கூட்டணிக்கு செல்வதாகவும் பூச்சாண்டி காட்டி வருகின்றனர்.
04:44 PM (IST) Dec 08
லஷ்கர்-இ-தைபா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழுக்களின் தலைவர்கள் பாகிஸ்தானில் ரகசியமாகச் சந்தித்துள்ளனர். இந்தியாவில் சமீபத்திய தாக்குதல்களுக்குக் காரணமான இந்த அமைப்புகள் மீண்டும் தாக்குதல்களுக்குத் தயாராகி, நிதி திரட்டி வருகின்றன.
04:43 PM (IST) Dec 08
Samantha and Raj Nidimoru Plan for Honeymoon Trip : நடிகை சமந்தா, பாலிவுட் இயக்குனர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இது இரண்டாவது திருமணமாகும். இவர்கள் ஹனிமூனுக்காக ரொமான்டிக் இடங்களைத் தேடுவதாகக் கூறப்படுகிறது.
04:42 PM (IST) Dec 08
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மறுத்த மாணவிக்கு உயர்நீதிமன்றம் அதிர்ச்சி கொடுத்துள்ளது. அந்த மாணவி பட்டம் ரத்து செய்யப்படுகிறதா? என்பது குறித்து பார்க்கலாம்.
04:29 PM (IST) Dec 08
Magara Rasi Weekly Rasi Palan: டிசம்பர் 08 முதல் 14 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:25 PM (IST) Dec 08
விடுமுறை நாட்கள் கூட சிலருக்கு மன அழுத்தம் இருப்பதாக புலம்புகிறார்கள். அதை சமாளிக்க உதவும் சில சிம்பிளான உதவி குறிப்புகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
04:13 PM (IST) Dec 08
Simbu talk about Arasan Movie Shooting : சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் அரசன் படத்தின் படப்பிடிப்பு நாளை மதுரையில் தொடங்குகிறது. தற்போது மலேசியாவில் இருக்கும் சிம்பு நேரடியாக மதுரைக்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்
04:08 PM (IST) Dec 08
ஆதார் அட்டை நகல்களை சேகரிக்கும் பழக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு புதிய சட்ட மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறது. இனி ஆதார் சரிபார்ப்பு, கியூஆர் கோடு மற்றும் புதிய மொபைல் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும்.
03:54 PM (IST) Dec 08
மக்களவையில் 'வந்தே மாதரம்' பாடல் குறித்த விவாதத்தின் போது, பிரதமர் மோடி தொடர்ந்து நேருவின் பெயரைக் குறிப்பிடுவதாக காங்கிரஸ் துணைத் தலைவர் கௌரவ் கோகாய் புள்ளிவிவரங்களுடன் விமர்சித்தார்.
03:48 PM (IST) Dec 08
டாடா மோட்டார்ஸ் தனது புதிய சியாரா எஸ்யூவியின் விலை விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய மாடல், ஹூண்டாய் கிரெட்டாவுக்கு கடுமையான போட்டியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.