- Home
- Astrology
- Weekly Rasi Palan: மகர ராசி நேயர்களே, இந்த வாரம் திரும்பும் திசை எல்லாம் ஆப்பு தான்.! கவனமா இருங்க.!
Weekly Rasi Palan: மகர ராசி நேயர்களே, இந்த வாரம் திரும்பும் திசை எல்லாம் ஆப்பு தான்.! கவனமா இருங்க.!
Magara Rasi Weekly Rasi Palan: டிசம்பர் 08 முதல் 14 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

வார ராசிப்பலன்கள் - மகரம்
மகர ராசி நேயர்களே, இந்த வாரம் உடல் மற்றும் மனச்சோர்வை உணரும் வாய்ப்பு உள்ளது. உங்களை நீங்களே வருத்திக் கொள்ளாமல் போதுமான ஓய்வு எடுப்பது அவசியம். இந்த வாரம் மெதுவான நிலையான செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அடித்தளத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் உங்கள் மனம் சொல்வதைக் கேட்டு நடக்கவும்.
நிதி நிலைமை:
நிதி ரீதியாக அபாயகரமான முதலீடுகளை தவிர்த்து விட வேண்டும். நிதி ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில் கவனம் செலுத்துங்கள். கடனை திருப்பி செலுத்த வேண்டிய சூழ்நிலை வரலாம். இது தற்காலிகமாக நிதி நிலைமையை பலவீனப்படுத்தலாம். வரவு செலவுத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய சிறந்த நேரம் ஆகும். தேவையற்ற செலவுகளை குறைக்க இதுவே சரியான நேரம் ஆகும்.
ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதிக உழைப்பு காரணமாக சோர்வு, தலைவலி, தசை பிடிப்பு ஏற்படலாம். எனவே கனமான உடற்பயிற்சிகளை தவிர்க்கவும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும். வழக்கமான உணவு முறை, தூக்கம் போன்ற பழக்க வழக்கங்களை பின்பற்றுவது உடல் நலத்திற்கு முக்கிய மருந்தாகும்.
கல்வி:
படிப்பதில் ஒருவித கவனக்குறைவு அல்லது மந்த நிலை காணப்படலாம். எனவே ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி ஒழுங்கமைத்து படிப்பது நல்லது. முடிக்கப்படாத பணிகளை முடிப்பது நன்மை தரும். தெளிவான சிந்தனையுடன் படிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
இன்று பணிச்சுழல் காரணமாக சற்று மன அழுத்தம் ஏற்படலாம். எனவே பொறுமையாக கையாள வேண்டும். அலுவலகம் சார்ந்த விமர்சனங்களை சக ஊழியர்களிடம் கூறுதல் கூடாது. தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு சற்று மந்த நிலை காணப்படும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் ஏற்கனவே உள்ள பணிகளை முடிப்பது, பழைய கோப்புகளை தெளிவுபடுத்துவது போன்ற அடித்தளத்தை வலுப்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது.
குடும்ப உறவுகள்:
இன்று உணர்வுபூர்வமாக செயல்படுவதை விட அமைதியாக செயல்படுவது நல்லது. நீண்ட கால இலக்குகள் பற்றி பேசுவது உறவுகளை வலுப்படுத்தும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அவசியமான இடத்தில் மட்டும் பேசுவது, வார்த்தைகளில் கவனத்துடன் இருப்பது குடும்ப உறவுகளில் பலத்தைக் கூட்டும்.
பரிகாரம்:
சனிக்கிழமை மாலையில் நல்லெண்ணெய் விளக்கேற்றி அமைதியாக அமர்ந்து தியானம் செய்யவும். இது உங்கள் ஆற்றலை அதிகரிக்கும். கோயில்கள் அல்லது ஏழை எளியவர்களுக்கு கருப்பு உளுந்து தானம் செய்யலாம். அனுமனை வழிபடுவது நேர்மறை பலன்களை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

