விடுமுறை நாட்கள் கூட சிலருக்கு மன அழுத்தம் இருப்பதாக புலம்புகிறார்கள். அதை சமாளிக்க உதவும் சில சிம்பிளான உதவி குறிப்புகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

விடுமுறை என்பது மகிழ்ச்சியான மற்றும் ஓய்வெடுப்பதற்கான காலம். இருப்பினும் அது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அதாவது சிலருக்கு விடுமுறை நாட்கள் கூட மன அழுத்தம் இருப்பதாக புலம்புகிறார்கள். மன அழுத்தம் என்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல. தனிமை, நிதி நெருக்கடி, குடும்பத்தில் இருந்து தூரமாக இருத்தல், குடும்பத்தில் மோதல், சமூகப் பதட்டம் போன்ற பல காரணங்கள் விடுமுறை நாட்களில் மன அழுத்தம் ஏற்படுவதற்கு காரணமாகும். விடுமுறை நாட்களில் ஏற்படும் இந்த மன அழுத்ததில் இருந்து விடுபட சில பயனுள்ள குறிப்புகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

விடுமுறை நாட்களில் மன அழுத்தத்தின் அறிகுறிகள் :

- அடிக்கடி மன அழுத்தம் அல்லது நம்பிக்கையற்ற உணர்வு

- நீங்கள் விரும்பும் விஷயங்களில் ஆர்வம் அல்லது மகிழ்ச்சி இல்லாமல் இருப்பது

- தூங்குவதில், கவனம் செலுத்துவதில் சிரமம்

- விடுமுறை நாட்களில் பதட்டமாக இருப்பது

விடுமுறை மன அழுத்தத்தை சமாளிக்க பயனுள்ள டிப்ஸ்கள் :

1. விடுமுறை மன அழுத்தத்தை தவிர்க்க முதலில் உங்களது விடுமுறை நாளை முன்கூட்டியே திட்டமிடுங்கள். உங்களுக்கான எதார்த்தமான விஷயங்களை அமைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக சுற்றுலா செல்லுதல், இரவு உணவு வெளியே சாப்பிடுதல், நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுதல் போன்றவையாகும்.

2. விடுமுறை நாட்களில் மன அழுத்தமாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் அந்நாளில் எங்காவது சுற்றுலா செல்லுதல் உங்களது மனநிலையை மாற்றும். ஆனால் மன அழுத்தத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க சாக்கு போக்குகளில் சொல்லுவார்கள். நீங்களும் இதே தப்பை செய்யாதீர்கள். வீட்டை விட்டு வெளியே வந்து புதிய காற்றை சுவாசியுங்கள். எந்தவொரு காரணமும் இல்லாமல் வெளியே வருவது கூட உங்களது மன நிலைக்கு நல்லது.

3. விடுமுறை மன அழுத்தத்திற்கு பணமும் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்லுதல், இரவு உணவுகள், பிடித்த பொருட்களை வாங்குதல் போன்றவை பஸ்ஸை காலியாக்கும். எனவே இதற்கென ஒரு பட்ஜெட்டை நிர்ணயித்து அதை கடைபிடித்து வந்தால் தேவையில்லாத மன அழுத்தம் ஏற்படாது. ஒருவேளை விடுமுறை நாட்களில் உங்களுக்கு செலவு அதிகமாக இருந்தால் இதற்கென முன்கூட்டியே சேமிக்க தொடங்குங்கள். இவை விடுமுறை மாநிலத்தை தடுக்க உதவும்.

4. நீங்கள் விடுமுறை நாட்களில் தனிமையாக இருப்பதாக உணர்ந்தால் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிடுங்கள். ஆனால் அதிகப்படியான மக்கள் இருக்கும் கூட்டத்தை தவிர்ப்பது நல்லது.

5. "இல்லைக" என்று சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். அதாவது உங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் பிறர் கேட்கும் உதவிக்கு, விஷயங்களுக்கு 'ஆம்' என்று சொல்வது உங்களை வெறுப்படைய செய்து, மனதை சோர்வடைய செய்யும். எனவே எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லாருக்கும் முன்னுரிமை கொடுப்பதை நிறுத்துங்கள். இப்படி செய்வதன் மூலம் மனசோர்வையும் குறைக்கலாம். விடுமுறை நாட்களையும் சந்தோஷமாக அனுபவிக்க முடியும்.

6. விடுமுறை நாட்களில் மன அழுத்தத்தை எதிர்த்து போராட ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றுவது மிகவும் அவசியம். மோசமான உடல்நலம் மற்றும் உணவுக் கோளாறு கூட மன சோர்வை மேலும் அதிகரிக்க செய்யும் எனவே அதிகப்படியான இனிப்புகள், பானங்களை சாப்பிடுவதில் தவிர்ப்பது நல்லது. இப்படி செய்தால் விடுமுறை நாட்களில் மனசோர்வு ஏற்படுவது குறையும்.