Published : Sep 01, 2023, 07:17 AM ISTUpdated : Sep 01, 2023, 09:26 PM IST

Tamil News Live Updates: இந்தியாவை காக்கப் போகும் இந்த இந்தியா கூட்டணி! முதல்வர் ஸ்டாலின்

சுருக்கம்

இந்தியாவை காக்கப் போகும் இந்த இந்தியா கூட்டணியானது கடந்த 3 மாதங்களாக மிகுந்த ஒற்றுமையுடனும் கட்டுக்கோப்புடனும் செயல்பட்டு வருகிறது. ஜனநாயகத்தை காப்பாற்றுவது என்ற ஒற்றை இலக்கின் முன் பாஜக தோற்கடிப்படும் என்பதில் சந்தேகமில்லை. பாஜகவுக்கு எதிரான கட்சிகளை முடிந்தவரை இந்ததியா கூட்டணியில் சேர்க்க வேண்டும் என மும்பை நகரில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

 Tamil News Live Updates: இந்தியாவை காக்கப் போகும் இந்த இந்தியா கூட்டணி! முதல்வர் ஸ்டாலின்

09:26 PM (IST) Sep 01

Breaking: இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு நடிகர் மாதவன் பரிந்துரை!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஆர்.மாதவன் "இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நியமனம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது". மேலும் படிக்க 
 

09:11 PM (IST) Sep 01

தாறுமாறா இருக்கே! ஜெயிலர் வெற்றி.. நெல்சனுக்கும் Porsche கார் கொடுத்து அசத்திய கலாநிதி மாறன்! இவ்வளவு விலையா?

'ஜெயிலர்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு... செக் மற்றும் Porsche கார் பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் படிக்க 

07:10 PM (IST) Sep 01

என் அம்மா சொன்ன வார்த்தை! காலில் விழுந்த ரஜினி! திரைப்பட கல்லூரியில் சூப்பர் ஸ்டார் இப்படிப்பட்டவரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரைப்படக் கல்லூரியில் படிக்கும் போது, எப்படி பட்ட நபர் என்பது குறித்து பிரபல நடிகை ஹேமா சௌத்ரி கடந்த சில வருடங்களுக்கு முன்பு நேர்காணல் ஒன்றில் பேசி உள்ள தகவல்கள் இப்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது. மேலும் படிக்க 
 

07:09 PM (IST) Sep 01

ரஜினிகாந்தை தொடர்ந்து நெல்சனுக்கு செக் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த கலாநிதி மாறன்!

ஜெயிலர் திரைப்படம் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு செக் ஒன்றை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். மேலும் படிக்க 
 

06:30 PM (IST) Sep 01

ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் என்ன? சாதக, பாதகங்கள் என்ன?

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான விஷயம் நாடு முழுவதும் பேசுபொருளாகி உள்ளது.
 

06:30 PM (IST) Sep 01

மக்களிடம் பணம் பறிப்பது தான் மோடி அரசின் நோக்கம்: ராகுல் விளாசல்!

மக்களிடம் இருந்து பணத்தைப் பிடுங்கி, அதை குறிப்பிட்ட சிலருக்கு மாற்றுவதுதான் மோடி அரசின் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

06:29 PM (IST) Sep 01

இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவனுக்கு புதிய பதவி!

இந்தூர் ஐஐடி ஆளுநர் குழுவின் தலைவராக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் நியமிக்கப்பட்டுள்ளார்

04:37 PM (IST) Sep 01

ஜி20 மாநாட்டுக்கு வரும் உலக தலைவர்கள்: குரங்குகள் அட்டூழியத்தை கட்டுப்படுத்த டெல்லியில் நூதன திட்டம்!

ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் குரங்குகள் அட்டூழியத்தை கட்டுப்படுத்த நூதன திட்டத்தை டெல்லி மாநகராட்சி அமல்படுத்தியுள்ளது

03:18 PM (IST) Sep 01

இண்டியா கூட்டணி: 13 கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைப்பு!

இந்தியா கூட்டணி சார்பில் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
 

03:10 PM (IST) Sep 01

புர்ஜ் கலிஃபாவில் எங்க பெயரா... எப்புட்ரா? ஆச்சர்யத்துடன் அண்ணாந்து பார்த்த அனிருத், அட்லீ- வைரலாகும் போட்டோஸ்

உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் அட்லீ இயக்கிய ஜவான் படத்தின் டிரைலர் ஒளிபரப்பப்பட்டபோது அனிருத் எமோஷனல் ஆகிப்போனார்.

02:58 PM (IST) Sep 01

சத்குரு ஓட்டும் காரோட விலையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க.. இந்த காரில் இவ்ளோ ஸ்பெஷல் இருக்கா.!!

சத்குரு ஸ்பாட் டிரைவிங் லேண்ட் ரோவர் டிஃபென்டர் சொகுசு எஸ்யூவி விலை கோடிக்கணக்கில் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

02:35 PM (IST) Sep 01

விலை ரொம்ப கம்மி.. சூப்பரான அம்சங்கள்.. ரூ.2000க்கும் கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட் வாட்ச் லிஸ்ட் இதோ !!

இந்தியாவில் 2000க்கு கீழ்  இருக்கும் சிறந்த ஸ்மார்ட் வாட்ச்கள் பற்றி இங்கு காணலாம். 2000 க்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட் வாட்ச்களில் கூட இரத்த அழுத்த மானிட்டர், கலோரி எண்ணிக்கை, SpO2 அளவு சென்சார் மற்றும் இதய துடிப்பு மானிட்டர் உள்ளது.

02:12 PM (IST) Sep 01

போட்டேவே பயங்கரமா இருக்கே... அமெரிக்காவில் விஜய்ண்ணாவை வைத்து வெங்கட் பிரபு செஞ்ச வேலையை பார்த்திங்களா

தளபதி 68 பட பணிகளுக்காக நடிகர் விஜய்யுடன் அமெரிக்கா சென்றுள்ள இயக்குனர் வெங்கட் பிரபு அங்கு எடுத்த புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

01:55 PM (IST) Sep 01

அதிர்ச்சி... பிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

பிரபல இளம் நடிகை அபர்ணா நாயர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்,  ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க 
 

01:39 PM (IST) Sep 01

இண்டியா கூட்டணியின் அஜெண்டா என்ன? ஒருங்கிணைப்பாளராகும் மல்லிகார்ஜுன கார்கே?

இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

01:20 PM (IST) Sep 01

சூரியனை ஆராயும் ஆதித்யா எல்1 விண்கலம்.. விண்ணில் எவுவதற்கான 24 மணி நேர கவுன்டவுன் தொடக்கம்

சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளால் செப்டம்பர் 2-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டோவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஆதித்யா எல் -1 என்ற செயற்கைக்கோள் விண்ணிற்கு அனுப்பப்பட உள்ளது.

01:18 PM (IST) Sep 01

பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவை காக்கப் போகும் இந்த இந்தியா கூட்டணியானது கடந்த 3 மாதங்களாக மிகுந்த ஒற்றுமையுடனும் கட்டுக்கோப்புடனும் செயல்பட்டு வருகிறது. ஜனநாயகத்தை காப்பாற்றுவது என்ற ஒற்றை இலக்கின் முன் பாஜக தோற்கடிப்படும் என்பதில் சந்தேகமில்லை. பாஜகவுக்கு எதிரான கட்சிகளை முடிந்தவரை இந்ததியா கூட்டணியில் சேர்க்க வேண்டும் என மும்பை நகரில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

01:11 PM (IST) Sep 01

ஐஸ்வர்யா ராய், ஸ்ரீதேவிலா கிட்ட கூட வர முடியாது! பணக்கார நடிகை ஜெயலலிதாவின்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்திய திரையுலகில் இதுவரை யாராலும் பீட் பண்ண முடியாத பணக்கார நடிகை என்கிற இடத்தை, தக்க வைத்து கொண்டுள்ளவர் ஜெயலலிதா தான் என கூறப்படுகிறது. இவரின் சொத்து விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.  மேலும் படிக்க 

12:28 PM (IST) Sep 01

நிஜமாவே அலப்பறை கிளப்புறாங்களேப்பா... 2 புது BMW காரோடு வந்து ரஜினிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கலாநிதி மாறன்

ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த்-க்கு பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கி இருக்கிறார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.

12:21 PM (IST) Sep 01

புது போன் வாங்குற ஐடியா இருக்கா.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. ரியல்மி கொடுத்த சூப்பர் அப்டேட்

இந்தியாவில் ரியல்மி (Realme C51) வெளியீட்டு தேதி உறுதிப்படுத்தப்பட்டது. இதன் அம்சங்கள், விலை மற்றும் பிற அம்சங்களை பார்க்கலாம்.

11:57 AM (IST) Sep 01

காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு காதலன் என்ன செய்தார் தெரியுமா? திருப்பூரில் நடந்த பயங்கரம்.!

திருப்பூர் அருகே காதலியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

11:26 AM (IST) Sep 01

சம்பளம் 100 கோடி தான்... ஆனா ‘ஜெயிலர்’ ரஜினிக்கு கலாநிதி மாறன் கொடுத்த ஷேர் அதுக்கும் மேல! முழு விவரம் இதோ

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின் ரஜினிகாந்தை சந்தித்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன், அவருக்கு படத்தின் ஷேர் தொகையை செக் ஆக வழங்கி உள்ளார்.

11:15 AM (IST) Sep 01

சீமானுக்கு என்ன ஆச்சு.. மருத்துவமனையில் திடீர் அனுமதி.. காரணம் விஜயலட்சுமியா?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

11:13 AM (IST) Sep 01

அரசு ஊழியர்களுக்கு புதிய விதி.. மத்திய அரசு விதித்த வருமான வரி விதிப்பு முறை - முழு விபரம் உள்ளே !!

அரசு ஊழியர்களுக்கு புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு இதுதொடர்பான வருமான வரி விதிப்பு முறைகள் அமலுக்கு வந்துள்ளது.

10:52 AM (IST) Sep 01

ரூ.2,000 நோட்டை இந்த தேதிக்குள் மாற்றுங்க.. இல்லைனா அவ்ளோதான் - முழு விபரம் இதோ

வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்கான கடைசி தேதி நெருங்குகிறது. இதனைப் பற்றி முழுமையாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.

10:38 AM (IST) Sep 01

நான் அப்பா ஆகப்போறேன்... திருமண நாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த புகழ் - குவியும் வாழ்த்துக்கள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன புகழ், தன்னுடைய மனைவி பென்ஸி கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

10:15 AM (IST) Sep 01

Today Gold Rate in Chennai : தங்கம் வாங்க போறீங்களா.. அப்படினா வாங்க இது தான் சரியான நேரம்..!

தங்கம் விலை தொடர்ந்து 6 நாளில் சவரன் ரூ.560 ஆக உயர்ந்து வந்த விலை இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

09:44 AM (IST) Sep 01

10 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனை.. டிஜிட்டல் இந்தியா படைத்த புது சாதனை.. இவ்ளோ பெரிய சாதனையா.!!

ஆகஸ்ட் மாதம், 10 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் செய்து யுபிஐ சாதனை படைத்துள்ளது. ஆகஸ்ட் 30 வரை, UPI மூலம் மொத்தம் 10.24 பில்லியன் பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையில் செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 2022ல் இருந்து இது கிட்டத்தட்ட 52% ஆண்டு வளர்ச்சியாகும்.

09:34 AM (IST) Sep 01

குஷி படத்தின் விமர்சனம்

சமந்தா, விஜய் தேவரகொண்டா கூட்டணியில் பான் இந்தியா படமாக வெளியாகி உள்ள குஷி படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

09:24 AM (IST) Sep 01

லைசென்ஸ் தேவையில்லை.. பட்ஜெட்டுக்குள் எந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாம்? முழு விபரம் இதோ !!

சமீபத்திய மாதங்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார ஸ்கூட்டர் சந்தையில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. வழக்கமான பெட்ரோல் பைக்குகளை விட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பல நன்மைகளை வழங்குகிறது. இந்தியாவில் உள்ள இந்த சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி பார்க்கலாம்.

09:22 AM (IST) Sep 01

கல்யாண பத்திரிகையில எதுக்கு பெயர் போடல.. ஆத்திரத்தில் தாத்தாவை கொன்ற பேரன்.. எப்படி தெரியுமா?

திருமண பத்திரிக்கையில் குடும்பத்தினர் பெயர் போடாத ஆத்திரத்தில் தாத்தாவை பேரன் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

08:54 AM (IST) Sep 01

ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

08:37 AM (IST) Sep 01

எஸ்பிஐ வங்கியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க - முழு விபரம் உள்ளே

பாரத ஸ்டேட் வங்கியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதவிகளுக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. எஸ்பிஐ அறிவித்துள்ள பணியிடங்களை பற்றி இங்கே முழுமையாக காண்போம்.

08:18 AM (IST) Sep 01

17 வயது சிறுவனை இதற்காக தான் கொன்றேன்! 5 துண்டாக வெட்டி கூறுபோட்ட பயங்கரம்.. ஆட்டோ டிரைவர் கைது.!

மும்பையில் 17 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்து உடலை ஐந்து துண்டுகளாக வெட்டி கூறுபோட்ட சம்பவம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். 

07:54 AM (IST) Sep 01

வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ரிசர்வ் வங்கி.. முழு விபரம் இதோ !!

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம் தொடர்பான மகிழ்ச்சியான செய்தியை மக்களுக்கு தெரிவித்துள்ளது.

07:21 AM (IST) Sep 01

Commercial LPG Gas Price: குட்நியூஸ்.. சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்தது.. எவ்வளவு கேட்டா ஷாக் ஆயிடுவீங்க?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட நிலையில் தற்போது வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

07:20 AM (IST) Sep 01

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் அருவி போல் கொட்டிய மழை நீர்.. பயணிகள் கடும் அவதி! வைரல் போட்டோ..!

சென்னையில் இருந்து செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டிக்குள் அருவி போல் மழை நீர் கொட்டியதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

07:19 AM (IST) Sep 01

சென்னையில் 468வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் 468வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


More Trending News