போட்டோவே பயங்கரமா இருக்கே... அமெரிக்காவில் விஜய்ண்ணாவை வைத்து வெங்கட் பிரபு செஞ்ச வேலையை பார்த்திங்களா
தளபதி 68 பட பணிகளுக்காக நடிகர் விஜய்யுடன் அமெரிக்கா சென்றுள்ள இயக்குனர் வெங்கட் பிரபு அங்கு எடுத்த புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Venkat Prabhu, Vijay
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி திரைக்கு வர உள்ளது. அப்படத்தில் நடித்து முடித்த உடனே தனது அடுத்த படமான தளபதி 68-ல் கவனம் செலுத்த தொடங்கினார் விஜய். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தான் தளபதி 68 திரைப்படத்தை தயாரிக்க உள்ளது.
Thalapathy 68
லியோ படம் ரிலீசாகும் வரை தளபதி 68 படம் குறித்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிடாமல் வைத்திருந்தாலும், அவ்வப்போது அப்டேட்டுகள் கசிந்த வண்ணம் உள்ளன. அதன்படி இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், அதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா அல்லது சிம்ரன், இன்னொரு விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்தது.
thalapathy vijay
அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிகர்கள் ஜெய் மற்றும் பிரபுதேவா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் கதை குறித்த முக்கிய தகவல் கசிந்துள்ளது. அதற்கு காரணம் இயக்குனர் வெங்கட் பிரபு தான். தளபதி 68 படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதால், அவரின் இளம் வயது கதாபாத்திரத்தை லேட்டஸ்ட் தொழில்நுட்பம் மூலம் உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... நிஜமாவே அலப்பறை கிளப்புறாங்களேப்பா... 2 புது BMW காரோடு வந்து ரஜினிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கலாநிதி மாறன்
vijay
இதற்காக விஜய்யை அழைத்துக்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள வெங்கட் பிரபு அங்குள்ள கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் என்கிற நிறுவனத்துடன் சேர்ந்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த தொழில்நுட்பம் இதற்கு முன்னர் ஷாருக்கானின் ஃபேன் படத்தின் பயன்படுத்தப்பட்டு இருந்தது. அதேபோல் அண்மையில் இந்தியன் 2 படத்துக்காக இயக்குனர் ஷங்கரும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருந்தார்.
venkat prabhu Tweet
இதற்காக அங்குள்ள ஸ்டூடியோவில் நடிகர் விஜய்யை ஸ்கேனிங் செய்துள்ளனர். அப்போது எடுத்த புகைப்படத்தையும், அந்த ஸ்டுடியோவை நடிகர் விஜய் சுற்றிப்பார்த்தபோது எடுத்த புகைப்படத்தையும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு எதிர்காலத்திற்கு வரவேற்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் தளபதி 68 படம் டைம் டிராவலை மையமாக வைத்து உருவாவதை தான் வெங்கட் பிரபு இப்படி சூசகமாக குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்... ஜெயிலர் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உருவெடுத்த ரஜினிகாந்த்! இதுதான் ரகசியம்