Tamilnadu Weatherman : இன்று வெளியே போக வேண்டாம்; வெயில் கொளுத்தும்: தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!

இன்று தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Tomorrow can be even hotter than today tamilnadu weather man pradeep john warning Rya

கோடை காலம் தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். ஏப்ரல் மாதத்திலேயே இப்படி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மே மாத அக்னி நட்சத்திரம் தொடங்கினால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றார் போல நாட்டின் பல மாநிலங்களில் ஏப்ரல் முதல் ஜுன் வரை வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

அதற்கேற்ப நாட்டின் பல மாநிலங்களில் தற்போது வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை பொறுத்து அதிக வெப்பத்திற்கான மஞ்சள் எச்சரிக்கை மற்றும் சிவப்பு எச்சரிக்கைகளை இந்திய வானிலை மையம் விடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் அவ்வப்போது சில மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திருப்பத்தூர், ஈரோடு, சேலம், கரூர் பரமத்தி, நாமக்கல், மதுரை, வேலூர், தருமபுரி, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. இதனால் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 18 இடங்களில் சதமடித்த வெயில்: உச்சம் தொட்ட வேலூர், கரூர் பரமத்தி!

இந்த நிலையில் இன்று தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் " இன்றைய தினத்தை விட நாளைய தினம் வெப்பம் அதிகமாக இருக்கும்.. ஆனால் இதுபோன்ற வெப்பநாட்களுக்கு பிறகு எப்போது ஒரு குட்நியூஸ் இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும்  தெரிவித்துள்ளது. எனினும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி உள்ள மாவட்டங்களில் இன்றும் நாளையும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் கட்டுப்பாடு - சென்னை காவல்துறை விளக்கம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios