தமிழகத்தில் 18 இடங்களில் சதமடித்த வெயில்: உச்சம் தொட்ட வேலூர், கரூர் பரமத்தி!
தமிழ்நாட்டின் 18 இடங்களில் கோடை வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக உள்ளது. கத்தரி வெயில் தொடங்க இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், இப்போதே 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. மதிய நேரங்களில் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று மட்டும் 18 இடங்களில் கோடை வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. அதன்படி, கரூர் பரமத்தி - 111°F, வேலூர் - 111°F, ஈரோடு - 110°F, திருச்சி - 110°F, திருத்தணி - 109°F, தருமபுரி - 107°F, சேலம் - 107°F, மதுரை நகரம் - 107°F, மதுரை விமான நிலையம் - 107°F, திருப்பத்தூர் - 107°F, நாமக்கல் - 106°F, தஞ்சாவூர் - 106°F, மீனம்பாக்கம் - 105°F, கடலூர் - 104°F, பாளையங்கோட்டை - 104°F, கோவை - 104°F, நுங்கம்பாக்கம் - 102°F, நாகப்பட்டினம் - 102°F வெப்பநிலை பதிவாகியுள்ளது.
ஆபாச வீடியோ சர்ச்சை: முதல் முறையாக மவுனம் கலைத்த பிரஜ்வல் ரேவண்ணா!
இதனிடையே, அடுத்த 3 தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 01.05.2024 மற்றும் 02.05.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.