MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ராமதாஸ் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்.. குஷியில் அன்புமணி

ராமதாஸ் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்.. குஷியில் அன்புமணி

பாமக தலைவர் பதவி காலம் முடிந்தும், அன்புமணி போலியான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாக ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு.

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 17 2026, 06:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Google

அன்புமணியின் தலைவர் பதவி கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. ஆனால், தற்போது வரை பாமகவில் தலைவராக இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். ஆகையால் பாமகவின் பெயர், சின்னம், கொடியை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக் கோரி கட்சி நிறுவனர் ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடா ராமதாஸ் தரப்புக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தினர். இதனையடுத்து ராமதாஸ் தரப்பு உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம், அன்புமணி ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

25
Image Credit : Asianet News

இந்நிலையில் உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்து இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என அன்புமணி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல, தன்னை வழக்கில் இணைக்கக் கோரி, கட்சி பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் கட்சியின் பொதுச்செயலாளரான தன்னை வழக்கில் இணைக்க உரிமையியல் நீதிமன்றம் மறுத்துவிட்டது என்பதால் ராமதாஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Related Articles

Related image1
கனிமொழி, சபரீசன், தயாநிதி மாறனை வம்புக்கு இழுக்கும் RB உதயகுமார்! என்ன சொல்லி இருக்காரு நீங்களே பாருங்களே!
Related image2
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. புகுந்து விளாசப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
35
Image Credit : Google

இதனை வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததுடன், ராமதாஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில் இடைக்கால தடை விதித்துள்ளதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அன்புமணி தரப்பில், கட்சியின் தலைவராக அன்புமணியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. மாம்பழம் சின்னத்தை கட்சிக்கு ஒதுக்கீடு செய்து அன்புமணிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

45
Image Credit : istock

ஏப்ரல் 9ம் தேதி தேர்தலை சந்திக்க உள்ள புதுச்சேரி மாநிலத்தில் இன்று இரண்டு வேட்பாளர்கள் தாக்கல் செய்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிய பிறகு நீதிமன்றம் தலையிடக் கூடாது. அதனால் இந்த வழக்குகளை தேர்தலுக்குப் பிறகு தள்ளி வைக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

55
Image Credit : Asianet News

இதற்கு ராமதாஸ் தரப்பில், பிரதான வழக்கில் தன்னை இணைக்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம். இது உள்கட்சி பிரச்சினை, அதற்கும் தேர்தல் நடைமுறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. வழக்கை தொடர்ந்து விசாரிக்க உரிமையியல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்குகளில் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அது தேர்தல் நடைமுறைக்கு இடையூறாக இருக்கும் என்பதால் உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்து விசாரணையை மே 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இராமதாஸ்
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
சென்னை உயர் நீதிமன்றம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
தேரை இழுத்து தெருவில் விட்ட ஆதவ் அர்ஜுனா.! மீண்டும் ரஜினி அரசியல்.! அரசியல் களம் சூடுபிடிக்குமா?
Recommended image2
Now Playing
தமிழகம் தற்போது போதைப் பொருள் மாஃபியாக்களின் கூடாரமாக மாறியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
Recommended image3
நயன்தாராவை சீண்டிய சி.வி.சண்முகம்.. களத்தில் குதித்த கனிமொழி.. நடந்தது என்ன?
Related Stories
Recommended image1
கனிமொழி, சபரீசன், தயாநிதி மாறனை வம்புக்கு இழுக்கும் RB உதயகுமார்! என்ன சொல்லி இருக்காரு நீங்களே பாருங்களே!
Recommended image2
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. புகுந்து விளாசப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved