- Home
- Gallery
- அழகில் அம்மாவுக்கே டஃப் கொடுக்குறாங்களே..! பிரபல நடிகைகளின் ரியல் மகள்களின் க்யூட் போட்டோஸ் இதோ..
அழகில் அம்மாவுக்கே டஃப் கொடுக்குறாங்களே..! பிரபல நடிகைகளின் ரியல் மகள்களின் க்யூட் போட்டோஸ் இதோ..
பிரபல நடிகைகளின் மகள்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பிரபல நடிகை கௌதமி 1998-ம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 1999-ம் ஆண்டு சுப்புலக்ஷ்மி பாட்டியா என்ற மகள் பிறந்தார். ஆனால் அதே ஆண்டு கௌதமி தனது கணவரை விவாகரத்து செய்து விட்டார். இந்த நிலையில் கௌதமியின் மகளின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் அடுத்த ஹீரோயின் ரெடி என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகை நதியா 1988-ம் ஆண்டு சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகள் உள்ளனர். நதியா தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதலங்களில் வெளியிட்டு வரும் நிலையில், அதனை பார்த்த ரசிகர்கள் நதியாவுக்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கிறார்கல் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகை சரண்யா 1995-ம் ஆண்டு நடிகரும், இயக்குனருமான பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பிரியதர்ஷினிக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. 2-வது மகள் சாந்தினி. சரண்யா பொன்வண்ணனின் தனது மகள்கள், கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை மதுபாலா, 1999-ம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அமயா ஷா, கேயா ஷா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். தனது மகள்களுடன் இருக்கும் போட்டோவை மதுபாலா அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.
நடிகை ரோஜா கடந்த 2002-ம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மகள் அனுஷுமாலிகா செல்வமணி அமெரிக்காவில் படித்து வருகிறார். The Flame In My Heart என்ற புத்தகத்தையும் அனுஷுமாலிகா எழுதி உள்ளார். ரோஜா தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் அவ்வபோது ட் ரெண்டாகி வருகிறது.