- Home
- Gallery
- நிதானமாக தொடங்கிய சிஎஸ்கே, ஏமாற்றிய ஆறுச்சாமி – ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் – சிஎஸ்கே 162 ரன்கள் குவிப்பு!
நிதானமாக தொடங்கிய சிஎஸ்கே, ஏமாற்றிய ஆறுச்சாமி – ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் – சிஎஸ்கே 162 ரன்கள் குவிப்பு!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 49ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்துள்ளது.

Chennai Super Kings vs Punjab Kings, 49th Match
சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 49ஆவது ஐபிஎல் 2024 போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
Chennai Super Kings vs Punjab Kings, 49th Match
இதில், இருவரும் நிதானமாக தொடங்கினர். 4 ஓவர்களில் சிஎஸ்கே 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 5ஆவது ஓவரில் 3 பவுண்டரி உள்பட 14 ரன்கள் எடுக்கப்பட்டது. 6ஆவது ஓவரில் ரஹானே 3 பவுண்டரி எடுக்க பவர்பிளேயில் சிஎஸ்கே விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்தது.
Chennai Super Kings vs Punjab Kings, 49th Match
அதன் பிறகு ஹர்ப்ரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் இருவரும் மாறி மாறி பந்து வீசி விக்கெட் எடுத்தனர். மேலும், பிரார் ஒரே ஓவரில் ரஹானே மற்றும் ஷிவம் துபே விக்கெட்டை கைப்பற்றினார். ரஹானே 29 ரன்களில் ஆட்டமிழக்க துபே ரன் ஏதும் எடுக்காமல் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார்.
Chennai Super Kings vs Punjab Kings, 49th Match
அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பவர்பிளேக்கு பிறகு ஸ்பின்னர்கள் பிரார் மற்றும் சாஹர் இருவரும் சிறப்பாக பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தினர். இருவரும் 7 ஓவர்கள் வீசி 30 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். இதில், 3 விக்கெட்டும் கைப்பற்றினர். அதோடு பவர்பிளேக்கு பிறகு 54 பந்துகளில் சிஎஸ்கே ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Chennai Super Kings vs Punjab Kings, 49th Match
ஜடேஜாவைத் தொடர்ந்து வந்த ரிஸ்வி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். மொயீன் அலி 15 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசியாக சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த ருதுராஜ் கெய்க்வாட் 62 ரன்கள் எடுத்தார். சேப்பாக்கத்தில் ருதுராஜ் கெய்க்வாட் விளையாடி 46, 67*, 108*, 98, 62 என்று ரன்கள் எடுத்துள்ளார்.
Chennai Super Kings vs Punjab Kings, 49th Match
கடைசியாக தோனி 17.6ஆவது ஓவரில் களமிறங்கி 11 பந்துகள் விளையாடி ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 14 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் 2 ரன்கள் ஓடும் போது ரன் அவுட்டில் வெளியேறினார். முதல் முறையாக இந்த சீசனில் தோனி ஆட்டமிழந்துள்ளார்.
Chennai Super Kings vs Punjab Kings, 49th Match
போட்டியின் 19.3ஆவது ஓவரில் தோனி டீப் கவர் திசையில் அடித்து ஓடாமல் ஸ்டிரைக்கில் நின்றார். ஆனால், டேரில் மிட்செல் வேகமாக ஓடி 2 ரன்கள் எடுத்தார். தோனி வராத போ போ என்றார். எனினும் அந்த பந்தில் மிட்செல் ரன் அவுட்டிலிருந்து தப்பித்துவிட்டார். இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது.
Chennai Super Kings vs Punjab Kings, 49th Match
பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஹர்ப்ரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அர்ஷ்தீப் சிங் மற்றும் கஜிசோ ரபாடா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.