- Home
- Gallery
- வேலையை காட்டிய இந்திய வீரர்கள் – T20 WC அணி அறிவிக்கப்பட்ட பிறகு 4, 10, 0, 0, 2 என்று ரன்கள் எடுத்த வீரர்கள்!
வேலையை காட்டிய இந்திய வீரர்கள் – T20 WC அணி அறிவிக்கப்பட்ட பிறகு 4, 10, 0, 0, 2 என்று ரன்கள் எடுத்த வீரர்கள்!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட பிறகு ரோகித் சர்மா 4, சூர்யகுமார் யாதவ் 10, ஹர்திக் பாண்டியா 0, ஷிவம் துபே 0, ரவீந்திர ஜடேஜா 2 என்று ரன்கள் எடுத்துள்ளனர்.

Shivam Dube, India T20 World Cup 2024 Squad
ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதி வரையில் 9ஆவது டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. டி20 உலகக் கோப்ப்பை தொடங்கப்பட்ட 2007 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக டிராபியை கைப்பற்றியது. அதன் பிறகு ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றவில்லை.
Ravindra Jadeja, India T20 World Cup 2024 Squad
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, நேபாள், ஓமன், கனடா, பப்புவா நியூ கினியா, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா என்று 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
India T20 World Cup 2024 Squad
இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஜூன் 5 ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி முதலில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரோகித் சர்மாவின் பிறந்தநாளான நேற்று இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
Hardik Pandya
டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாயதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.
மாற்று வீரர்கள்: சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான்.
Indian Cricket Team
இந்த 15 பேர் கொண்ட இந்திய அணியில் சில மாற்றங்களும் செய்யப்பட இருக்கிறது. உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் அதில் மாற்றங்கள் செய்ய ஒரு முறை வாய்ப்பு வழங்கப்படும். ஆனால், இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
T20 World Cup 2024
இந்த நிலையில் தான் இந்திய அணி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 48ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், ரோகித் சர்மா 4, சூர்யகுமார் யாதவ் 10, ஹர்திக் பாண்டியா 0 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
India T20 World Cup 2024 Squad
இதே போன்று பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்த ஜஸ்ப்ரித் பும்ரா ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. இதைத் தொடர்ந்து இன்று மே 1 ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 49ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஷிவம் துபே கோல்டன் டக், ரவீந்திர ஜடேஜா 2 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
Team India T20 World Cup Squad
ஆனால், இந்திய அணியில் இடம் பெறாத ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக விளையாடி 38 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் வரையில் அதிரடியாக விளையாடிய இந்திய வீரர்கள், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புஷ்வானமாக மாறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Team India T20 World Cup Squad
இது போன்ற வீரர்களை வைத்துக் கொண்டு இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் விளையாடுகிறது. ஏற்கனவே அதிக வயது கொண்ட வீரர்களை வைத்து இந்திய அணி உலகக் கோப்பையில் விளையாடுகிறது.
Team India T20 World Cup Squad
ஆனால், கடந்த 2007 ஆம் ஆண்டு இந்திய அணி இளம் வீரர்களை வைத்து உலகக் கோப்பையில் விளையாடி டிராபியை கைப்பற்றியது. இது போன்று ஒரு இந்திய அணி விளையாட வேண்டும் என்று ஏற்கனவே விமர்சனம் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
India T20 World Cup 2024 Squad
எனினும், நேற்று அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இனி வரும் ஐபிஎல் போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதைப் பொறுத்து மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.