நடிகர் விஜய்யின் கில்லி பட போஸ்டரை கிழித்த அஜித் ரசிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பெரிய நடிகர்களின் புதுப் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், ரீ ரிலீஸ் செய்யப்படும் படங்கள் வசூல் வேட்டை நடத்தி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் விஜய்யின் கில்லி படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த படம் இதுவரை ரூ.25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இன்னும் சில நாட்களில் கில்லி படத்தின் லைஃப்டைம் வசூலை கடந்து விடும் என்று கூறப்படுகிறது.
அழகில் அம்மாவுக்கே டஃப் கொடுக்குறாங்களே..! பிரபல நடிகைகளின் ரியல் மகள்களின் க்யூட் போட்டோஸ் இதோ..
இந்த நிலையில், நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தீனா படம் ரி ரீலிஸ் செய்யப்பட்டது. இந்த படத்தை அஜித் ரசிகர்கள் பேனருக்கு மாலை அணிவித்தும், நடனமாடியும் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அந்த வகையில் பல திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் படம் பார்க்க வந்த அஜித் ரசிகர்கள் சிலர் தியேட்டருக்குள்ளேயே பட்டாசு வெடித்தனர். எனினும் அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதலங்களில் வைரலானது.
இந்த நிலையில் சென்னை காசி திரையரங்கில் தீனா படம் பார்க்க வந்த அஜித் ரசிகர்கள் சிலர் விஜய்யின் கில்லி பட போஸ்டரை கிழித்தனர். இந்து படம் பார்க்க வந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவியது. பலரும் அஜித் ரசிகர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் கில்லி பட போஸ்டர் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் தியேட்டர் மேலாளர் ராம்ராஜ் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் அஜித் ரசிகர் எபினேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், ஆபாசமாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் எம்.ஜி.ஆர் நகர் போலீசார் அஜித் ரசிகரை கைது செய்துள்ளனர்.
அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2: தி ரூல்'... முதல் சிங்கிள் வெளியீடு!
