MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 10 போட்டிகளில் 9ஆவது முறையாக தோல்வி அடைந்த ருதுராஜ் கெய்க்வாட் – தோனியின் வழிகாட்டலில் கிடைக்கும் வெற்றி!

10 போட்டிகளில் 9ஆவது முறையாக தோல்வி அடைந்த ருதுராஜ் கெய்க்வாட் – தோனியின் வழிகாட்டலில் கிடைக்கும் வெற்றி!

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இடம் பெற்று விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட் 9ஆவது முறையாக டாஸில் தோல்வி அடைந்துள்ளார்.

3 Min read
Author : Rsiva kumar
| Updated : May 01 2024, 08:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
Chennai Super Kings vs Punjab Kings, 49th IPL 2024 Match

Chennai Super Kings vs Punjab Kings, 49th IPL 2024 Match

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார். முதல் போட்டியிலேயே டாஸில் ருதுராஜ் கெய்க்வாட் தோல்வி அடைந்தார். இதுவரையில் சிஎஸ்கே 9 போட்டிகளில் விளையாடியுள்ளது.

211
Chennai Super Kings vs Punjab Kings, 49th Match

Chennai Super Kings vs Punjab Kings, 49th Match

இதில், 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. இந்த 9 போட்டிகளில் 8ல் ருதுராஜ் கெய்க்வாட் டாஸில் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் தான் இன்று சிஎஸ்கே தனது 10ஆவது போட்டியில் விளையாடி வருகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 49ஆவது லீக் போட்டியில் சிஎஸ்கே விளையாடி வருகிறது. எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண் பவுலிங் தேர்வு செய்தார்.

311
Chennai Super Kings vs Punjab Kings, 49th Match

Chennai Super Kings vs Punjab Kings, 49th Match

அதன்படி சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்கிறது. இந்தப் போட்டியிலும் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் தோல்வி அடைந்து 9ஆவது முறையாக டாஸ் தோல்வி அடைந்துள்ளார். இந்த 9 போட்டிகளில் தோனியின் வழிகாட்டுதலின் படி சிஎஸ்கே 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

411
Chennai Super Kings vs Punjab Kings,

Chennai Super Kings vs Punjab Kings,

என்னதான் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருந்தாலும், மைதானத்தில் பீல்டிங் செட் செய்வது முதல் பவுலர்களை பந்து வீச அழைப்பது வரை எல்லா கண்ட்ரோலும் தோனியிடம் தான். இப்படி 9 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார்.

511
Chennai Super Kings

Chennai Super Kings

சென்னை சூப்பர் கிங்ஸ்:

அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ரிச்சர்ட் கிளீசன், முஷ்தாபிஜூர் ரஹ்மான்.

பஞ்சாப் கிங்ஸ்:

ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரண் (கேப்டன்), ரிலீ ரோஸோவ், ஷஷாங்க் சிங், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அஷூதோஷ் சர்மா, ஹர்ப்ரீத் கவுர், ஹர்ஷல் படேல், கஜிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்

611
CSK vs PBKS 49th IPL Match 2024

CSK vs PBKS 49th IPL Match 2024

இந்தப் போட்டியில் மதீஷா பதிரனா மற்றும் துஷார் தேஷ்பாண்டே இருவரும் அணியில் இடம் பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் இடம் பெற்றுள்ளார். மேலும், ரிச்சர்டு கிளீசன் அணியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக வயதில் அறிமுகமானவர்களில் தற்போது சிஎஸ்கே அணியில் 36 வயது 151 நாட்கள் நிரம்பிய ரிச்சர்டு கிளீசன் இடம் பெற்றுள்ளார்.

711
Chennai Super Kings vs Punjab Kings, 49th Match

Chennai Super Kings vs Punjab Kings, 49th Match

இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 28 போட்டிகளில் 15 போட்டிகளில் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. 12 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. மேலும், ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. இரு அணிகளும் சேப்பாக்கத்தில் விளையாடிய 7 போட்டிகளில் 4ல் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. 2ல் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

811
Chennai Super Kings vs Punjab Kings,

Chennai Super Kings vs Punjab Kings,

மேலும், சேப்பாக்கத்தில் நடைபெற்ற 69 போட்டிகளில் சிஎஸ்கே 49 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 19 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி டை ஆனது. இந்த சீசனில் சிஎஸ்கே விளையாடிய 9 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.

911
CSK vs PBKS 49th IPL 2024 Match

CSK vs PBKS 49th IPL 2024 Match

பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய 9 போட்டிகளில் 3ல் வெற்றியும், 6ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. எஞ்சிய 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது என்பது மற்ற அணிகளின் புள்ளிகள் மற்றும் ரன் ரேட் அடிப்படையில் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

1011
Chennai Super Kings vs Punjab Kings, 49th Match

Chennai Super Kings vs Punjab Kings, 49th Match

இந்தப் போட்டியில் சாதிக்க காத்திருக்கும் வீரர்கள்:

சிக்சர் மன்னன் ஷிவம் துபே ஒரு சிக்ஸர் அடித்தால் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றி 100 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

தோனி 3 சிக்ஸர்கள் அடித்தால், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 250 சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைப்பார்.

1111
Chennai Super Kings vs Punjab Kings,

Chennai Super Kings vs Punjab Kings,

ஜானி பேர்ஸ்டோவ் 5 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் வரலாற்றில் 1500 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

டேரில் மிட்செல் 51 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் 4500 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

லியாம் லிவிங்ஸ்டன் 61 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் கிரிகெட்டில் 1000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
எம். எஸ். தோனி
பஞ்சாப் கிங்ஸ்
ருதுராஜ் கெய்க்வாட்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved