புர்ஜ் கலிஃபாவில் எங்க பெயரா... எப்புட்ரா? ஆச்சர்யத்துடன் அண்ணாந்து பார்த்த அனிருத், அட்லீ- வைரலாகும் போட்டோஸ்
உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் அட்லீ இயக்கிய ஜவான் படத்தின் டிரைலர் ஒளிபரப்பப்பட்டபோது அனிருத் எமோஷனல் ஆகிப்போனார்.
Anirudh, Atlee
கோலிவுட்டில் 4 கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வந்த அட்லீ, பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகி உள்ள திரைப்படம் தான் ஜவான். இப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஜவான் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் அனிருத்தும் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
Jawan Trailer launch
ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதற்கான புரமோஷன் பணிகளும் படு ஜோராக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அண்மையில் சென்னையில் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழாவை நடத்திய படக்குழுவினர், அதை முடித்த கையோடு துபாய் பறந்து சென்றனர்.
இதையும் படியுங்கள்... தெறி பேபியாக நயன்தாரா... மெர்சல் நாயகனாக மாஸ் காட்டிய ஷாருக்கான்... பிகில் கிளப்பும் அட்லீயின் ஜவான் டிரைலர்
burj khalifa
அங்கு உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் ஜவான் படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர் ஷாருக்கான், இயக்குனர் அட்லீ, அவரது மனைவி பிரியா அட்லீ, இசையமைப்பாளர் அனிருத் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது புர்ஜ் கலிஃபாவில் டிரைலர் திரையிடப்பட்டபோது ஆச்சர்யத்துடன் பார்த்த அனிருத்தும், அட்லீயும் தங்கள் பெயர் அதில் வந்தபோது எமோஷனல் ஆகினர்.
Atlee Insta post
இதையடுத்து பேசிய அனிருத், துபாய்க்கு பலமுறை வந்திருக்கிறேன். இதே ரோட்டில் நடந்து சென்றிருக்கிறேன். ஆனால் தற்போது புர்ஜ் கலிஃபாவில் என் பெயரை பார்ப்பேன் என்று கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. இந்த தருணத்தை ஏற்படுத்தி தந்த ஷாருக்கானுக்கு மிக்க நன்றி என்று உணர்ச்சி பொங்க பேசியிருந்தார் அனிருத். அதேபோல் அட்லீயும் அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அனிருத் மீதான தன் அன்பை வெளிப்படுத்தி உள்ளார்.
இதையும் படியுங்கள்... நிஜமாவே அலப்பறை கிளப்புறாங்களேப்பா... 2 புது BMW காரோடு வந்து ரஜினிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கலாநிதி மாறன்