அட்லீ பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் ஷாருக்கானின் ஜவான் படத்தின் மாஸான டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் எந்திரன், நண்பன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் அட்லீ. இவர் முதன்முதலில் இயக்கிய ராஜா ராணி திரைப்படம் கமர்ஷியல் ஹிட் அடித்தது. இதையடுத்து விஜய்யை வைத்து தெறி என்கிற மாஸ் ஹிட் படத்தை கொடுத்ததோடு மட்டுமின்றி, தளபதியின் ஆஸ்தான இயக்குனராகவும் உருவெடுத்தார் அட்லீ.

அட்லீயின் மேக்கிங் ஸ்டைல் பிடித்துப் போனதால், அடுத்தடுத்து மெர்சல், பிகில் என இரண்டு பட வாய்ப்புகளை வழங்கினார் விஜய். அதனை நன்கு பயன்படுத்தி தளபதி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த அட்லீக்கு பாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்தது. அதுவும் ஷாருக்கானே அழைத்து தனக்கு படம் பண்ணுமாறு கேட்டார். இந்த ஜாக்பாட் வாய்ப்பை மிஸ் பண்ண விரும்பாத அட்லீ, ஜவான் படக் கதையை சொல்லி ஓகே வாங்கினார்.

இதையும் படியுங்கள்... ஜவான் ஆடியோ லாஞ்சில் அனிருத் உடன் மரண மாஸ் குத்து டான்ஸ் ஆடிய ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ

அந்த கூட்டணியின் மூன்று ஆண்டுகள் கடின உழைப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ஜவான். இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியாமணி என மிகப்பெரிய கோலிவுட் படையே நடித்துள்ளது. அதுமட்டுமின்றி இசையமைப்பாளர் அனிருத், கலை இயக்குனர் முத்துராஜ், படத்தொகுப்பாளர் ரூபன், பாடலாசிரியர் விவேக் என ஏராளமான கோலிவுட் பிரபலங்களையே இதில் பணியாற்ற வைத்துள்ளார் அட்லீ.

ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படத்தின் மாஸான டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. டிரைலர் முழுக்க அனல் பறக்கும் வசனங்களும் அதகளமான சண்டைக்காட்சிகளும் நிரம்பி வழிகின்றன. ஆங்காங்கே அட்லீயின் முந்தைய படங்களான தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களின் டச்சும் இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

Jawan | Official Tamil Trailer | Shah Rukh Khan | Atlee | Nayanthara | Vijay S | Deepika P | Anirudh

ஜவான் டிரைலர் மூலம் இதில் ஷாருக்கான் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பது உறுதியாக தெரிகிறது. அட்லீ படம் என்றாலே காப்பி சர்ச்சையில் சிக்குவது வழக்கம் தான். அந்த வரிசையில் ஜவான் பட டிரைலரை பார்த்தே இது தெறி மற்றும் மெர்சல் படங்களைப் போல் இருப்பதாக நெட்டிசன்கள் ஒப்பிடத் தொடங்கிவிட்டனர். இனி படம் வெளியானால் என்னென்ன கூத்தெல்லாம் நடக்கப்போகிறதோ என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படியுங்கள்... ஜவான் படம் உருவாக... என்னோட அண்ணன்; என்னோட தளபதி தான் காரணம் - அட்லீ நெகிழ்ச்சி