ஜவான் படம் உருவாக... என்னோட அண்ணன்; என்னோட தளபதி தான் காரணம் - அட்லீ நெகிழ்ச்சி
ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் உருவாக முழுக்க முழுக்க காரணம் தளபதி விஜய் தான் என இயக்குனர் அட்லீ, ஜவான் ஆடியோ லாஞ்சில் பேசி உள்ளார்.
தமிழில் ராஜா ராணி படம் மூலம் அறிமுகமாகி, விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மாஸ் ஹிட் படங்களை கொடுத்த அட்லீ, தற்போது ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இயக்குனர் அட்லீ, இப்படம் உருவாக தளபதி விஜய் தான் காரணம் என பேசி உள்ளார்.
அவர் பேசியதாவது : “எல்லாருக்கும் வணக்கம், இந்த படம் உருவாக முழுக்க முழுக்க காரணம் என்னோட அண்ணன், என்னோட தளபதி விஜய் தான். நான் இங்க 6 மாசம் படம் பண்ணி அதை 7-வது மாசம் ரிலீஸ் பண்ணி ஜாலியா வழந்துட்டு இருந்தேன். அதற்கு காரணம் தளபதி. எனக்கு ஜவான் வாய்ப்பு வந்தபோது, கொரோனாவும் வந்தது. நினைத்ததைவிட அது முடிவுக்கு வர தாமதம் ஆனது. நான் உண்மையான தளபதி ரசிகன் என்பதால் கொடுத்த வாக்கை மீறியதில்லை.
இதையும் படியுங்கள்... ஜவான் ஆடியோ லாஞ்சில் அனிருத் உடன் மரண மாஸ் குத்து டான்ஸ் ஆடிய ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
13 வருஷத்துக்கு முன்னாடி எந்திரன் ஷூட்டிங்கிற்காக மும்பைக்கு போனப்போ நான் ஷாருக்கான் சார் வீட்டின் முன் நின்று போட்டோ எடுத்துட்டு வந்தேன். ஆனா இப்போ நான் அங்கு செல்லும்போது என்னுடைய கார் வந்ததும் கதவு திறக்கும், ஷாருக்கான் சார் என்னை வாசலில் வந்து வரவேற்கிறார். நிஜமாவே கடவுள் எப்பவுமே கிரேட் தான்.
ஷாருக்கான் எனக்கு என் தந்தையைவிட மேலானவர். எனக்கு எல்லாமே அவர் தான். யார ஹீரோயினா போடுறதுன்னு பேச்சு வந்தப்போ, என்னுடைய டார்லிங் நயன்தாராவை ஹீரோயினா போடலாமானு ஷாருக்கிட்ட கேட்டேன். அவரும் உடனே ஓகேனு சொல்லிட்டாரு என ஜவான் பட அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார் அட்லீ.
இதையும் படியுங்கள்... ஜவான் ஆடியோ லாஞ்சுக்கு ஆப்சென்ட் ஆன நயன்தாரா... அப்செட் ஆன ரசிகர்கள்