ஜவான் ஆடியோ லாஞ்சுக்கு ஆப்சென்ட் ஆன நயன்தாரா... அப்செட் ஆன ரசிகர்கள்
ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா கலந்துகொள்வார் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஜெயிலர் படத்துக்கு பின்னர் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் என்றால் அது ஷாருக்கானின் ஜவான் தான். இது இந்திப்படமாக இருந்தாலும், இதில் பணியாற்றிய பெரும்பாலனவர்கள் தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள் தான். அட்லீ இயக்கியுள்ள ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
ஜவான் படத்தில் தமிழ்நாட்டு பிரபலங்களான நயன்தாரா, அனிருத், விஜய் சேதுபதி, யோகிபாபு, அட்லீ, ரூபன் ஆகியோர் பணியாற்றி இருப்பதால் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்த முடிவெடுத்தது படக்குழு. இதையடுத்து இன்று மாலை ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் தொடங்கி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் திரளாக வந்து கலந்துகொண்டனர்.
வழக்கமாக பட விழாக்களையும், புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளக் கூடாது என்கிற பாலிசியை கடைபிடித்து வரும் நயன்தாரா, ஜவான் படத்திற்காக அதனை தகர்க்க உள்ளதாக கூறப்பட்டது. இன்று ஜவான் பட ஆடியோ லாஞ்சில் நயன்தாரா கலந்து கொள்வார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவரோ, வழக்கம்போல் ஆப்சென்ட் ஆகி ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளார்.
இதையும் படியுங்கள்... ஜவான் ஆடியோ லான்ச்..! பாலிவுட் கிங் கானை வரவேற்க திரண்ட ரசிகர்கள்..! வைரல் வீடியோ..