'ஜவான்' படத்தின் இசை வெளியீட்டு விழா, சற்று முன்னர் துவங்கிய நிலையில், பல ரசிகர்கள் ஒன்று திரண்டு பாலிவுட் கிங் கான் ஷாருக்கானை வரவேற்ற வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

இயக்குனர் அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடித்த முடித்துள்ள திரைப்படம் ஜவான். இந்த திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ள நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அதன்படி தற்போது சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில், 'ஜவான்' படத்தின் இசை வெளியீட்டு விழா, நடந்து வருகிறது.

Scroll to load tweet…

ஷாருக்கான் மற்றும் நயன்தாராவை பார்க்க ஏராளமான ரசிகர்கள் இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது மட்டுமின்றி, பலர் கல்லூரி முன்பு திரண்டதால் அந்த பகுதியே மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. ஷாருக்கான் இதற்கு முன்பு நடித்த படங்களை விட மாறுபட்ட கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக, போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். பல ஆக்சன் காட்சிகளிலும் நயன்தாரா நடித்து தும்சம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Scroll to load tweet…

இந்த படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க, யோகி பாபு காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக துவங்கியுள்ள நிலையில்... ஷாருக்கானை வரவேற்க ரசிகர்கள் ஒன்று திரண்ட வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 'ஜவான்' இசை வெளியீட்டு விழாவில், ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி, யோகி பாபு, உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து உள்ளதாக கூறப்படுகிறது.

Scroll to load tweet…