MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • க்யூவில் நிற்கும் விஜய், சூர்யா படங்கள்... எலெக்‌ஷனுக்கு பின் களைகட்டப்போகும் கோலிவுட் - ஒரு பார்வை

க்யூவில் நிற்கும் விஜய், சூர்யா படங்கள்... எலெக்‌ஷனுக்கு பின் களைகட்டப்போகும் கோலிவுட் - ஒரு பார்வை

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் முதல் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கருப்பு திரைப்படம் வரை 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிந்த பின் ரிலீஸ் ஆக உள்ள படங்கள் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 16 2026, 03:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Tamil Movie Release After TN Elections
Image Credit : X

Tamil Movie Release After TN Elections

2026-ம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அரசியல் கட்சிகள் இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே பம்பரம் போல் சுழன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23-ந் தேதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் வருகிற மே மாதம் 4ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். இதனால் தமிழ் திரையுலகமும் இந்த தேர்தலை உற்று நோக்கி வருகிறது. ஏனெனில் ஏராளமான பெரிய படங்கள் தேர்தலுக்கு பின் ரிலீஸ் ஆக உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.

25
கர (Kara)
Image Credit : dhanushkraja Instagram

கர (Kara)

எலெக்‌ஷன் முடிந்த அடுத்த வாரத்தில் தனுஷின் கர என்கிற கரசாமி திரைப்படம் திரைக்கு வர உள்ளது. விக்னேஷ் ராஜா இயக்கிய இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இப்படம், வருகிற ஏப்ரல் மாதம் 28-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதற்கு முன்னதாக தனுஷ் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான கர்ணன் திரைப்படம் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிந்த பின் வெளியாகி வெற்றிபெற்றது. அதேபோல் கர திரைப்படமும் கலெக்‌ஷன் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Related image1
ஏப்ரல் 10 ரிலீஸ் இல்லை... கருப்பு படம் பற்றி புது குண்டை தூக்கிப்போட்ட ஆர்.ஜே.பாலாஜி
Related image2
ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை வாரியம் கொடுத்த பேரிடி... ரிலீஸுக்கு வந்த புது சிக்கல்..!
35
கருப்பு (Karuppu)
Image Credit : instagram/Suriya Sivakumar

கருப்பு (Karuppu)

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் மற்றொரு படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்த இப்படம் கடந்த ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டாலும் ரிலீஸ் ஆகாமல் முடங்கிப் போய் உள்ளது. இப்படத்தை ஏப்ரலில் வெளியிட மாட்டோம் என ஆர்ஜே பாலாஜி திட்டவட்டமாக கூறியதால், கன்பார்ம் மே மாதம் தான் ரிலீஸ் ஆகும் என்பது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை மே 15ந் தேதி ரிலீஸ் செய்வதற்கான வேலையில் படக்குழு இறங்கி உள்ளதாம். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

45
ஜனநாயகன் (Jana Nayagan)
Image Credit : KVN Productions

ஜனநாயகன் (Jana Nayagan)

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜனநாயகன். எச்.வினோத் இயக்கியுள்ள இப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கே ரிலீஸ் ஆகவேண்டியது. ஆனால் கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால், படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் மறுதணிக்கைக்கு அனுப்பப்பட்டது. இதுவரை சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் இப்படமும் மே மாதம் தான் திரைக்கு வரும் என கூறப்படுகிறது. எலெக்‌ஷன் ரிசல்ட் வெளிவந்த பின்னரே ஜனநாயகன் ரிலீஸ் தேதி உறுதியாகுமாம்.

55
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany)
Image Credit : x/7screenstudio

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany)

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். மேலும் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை லலித் மற்றும் நயன்தாரா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படமும் மே மாத வெளியீட்டிற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜன நாயகன்
தனுஷ்
சூர்யா
விஜய் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
MGR - Saroja Devi | காத்திருந்த எம்ஜிஆர்...காதலை நிராகரித்த சரோஜா தேவி..! கெத்து காட்டிய பைங்கிளி !
Recommended image2
கனிகா அவுட்! எதிர்நீச்சல் 2 சீரியலில் இனி ஈஸ்வரியாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
Recommended image3
உச்சத்தில் கார்த்திக்... உருக்கும் தனிப்பட்ட சோகம்! இந்த வெற்றிக்கு பின்னால் இவ்வளவு வலியா?
Related Stories
Recommended image1
ஏப்ரல் 10 ரிலீஸ் இல்லை... கருப்பு படம் பற்றி புது குண்டை தூக்கிப்போட்ட ஆர்.ஜே.பாலாஜி
Recommended image2
ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை வாரியம் கொடுத்த பேரிடி... ரிலீஸுக்கு வந்த புது சிக்கல்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved