ஏப்ரல் 10 ரிலீஸ் இல்லை... கருப்பு படம் பற்றி புது குண்டை தூக்கிப்போட்ட ஆர்.ஜே.பாலாஜி
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் ஏப்ரல் 10ந் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படம் அன்றைய தினம் ரிலீஸ் ஆகாது என இயக்குநரே கூறி உள்ளார்.

Karuppu Release Delayed
சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் 'கருப்பு'. இந்த படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார். இது ஒரு மாஸ் கமர்ஷியல் என்டர்டெயினர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகள் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டதாக சினிமா வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி உரிமையையும், ஜீ தமிழ் தொலைக்காட்சி சாட்டிலைட் உரிமையையும் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் ஆகாது
இந்நிலையில், 'கருப்பு' படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகாது என இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார். இது சூர்யா ரசிகர்களை கடும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாததால் அவர்கள் கோபத்திலும் உள்ளனர். ரசிகர்களின் இந்த நிலையை புரிந்துக்கொண்ட ஆர்.ஜே. பாலாஜி, இன்னும் 10 நாட்களில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். ஆனால் படம் ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் ஆகாது என்பதையும் அவர் உறுதிபட கூறி உள்ளார்.
சூர்யா - திரிஷா ஜோடி
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவும் த்ரிஷாவும் இந்தப் படத்தில் மீண்டும் இணைவது ஒரு முக்கிய சிறப்பம்சம். 'கருப்பு' படத்தில் சூர்யா மற்றும் த்ரிஷா இருவருமே இதுவரை இல்லாத வித்தியாசமான மேக் ஓவரில் தோன்றுவார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களுடன் இந்திரன்ஸ், நட்டி, சுவாசிகா, அனகா மாயா ரவி, ஷிவதா, சுப்ரீத் ரெட்டி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் உள்ளது.
கருப்பு டீம்
இளம் இசைப் புயல் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே. விஷ்ணு கேமராவை கையாள்கிறார். கலைவாணன் படத்தொகுப்பு செய்கிறார். சண்டைக் காட்சிகளைப் பொறுத்தவரை, அன்பறிவ் மற்றும் விக்ரம் மோர் என இரண்டு முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர்கள் இணைந்து மிரட்டலான ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். விருது பெற்ற தயாரிப்பு வடிவமைப்பாளர் அருண் வெஞ்சாரமூடு பிரம்மாண்டமான செட்களை உருவாக்கியுள்ளார்.
கருப்பு அப்டேட்
தற்போது, 'கருப்பு' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பும், போஸ்ட்-புரொடக்ஷன் பணிகளும் ஒரே நேரத்தில் வேகமாக நடந்து வருகின்றன. தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அறிவித்தது போல, இது ஒரு திருவிழா கொண்டாட்டத்திற்கான படமாக இருக்கும். ரிலீஸ் தேதி மற்றும் பிற சர்ப்ரைஸ் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. சூர்யா ரசிகர்களுக்கு தியேட்டரில் கொண்டாட ஒரு நல்ல படமாக 'கருப்பு' அமையும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
